ஆத்திசூடி கதைகள்     
     73-நேர்பட ஒழுகு

அம்மா எனக்கு தூக்கம் வரவில்லை என்றால் ரமா.

கதை சொல்கிறேன் கேட்கிறாயா? என்றாள் அம்மா.

நேர்மை என்றால் என்ன? அதைப் பற்றி சொல்லுங்களேன். என்றாள் ரமா.

நல்ல கேள்வி கேட்டாய், இந்த சின்ன வயதில் பல கேள்விகள் நம் மனதில் வரும். அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நல்ல முறையில் ஒழுங்காக வாழ்வது நேர்மை என்று சொல்லலாம்.

பெரியவர்கள் ஆகி கடைப்பிடிப்பது அல்ல…! சின்ன வயதிலே பொய் பேசாமல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், கடவுள் பக்தியுடன், பிறருக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாமல், முடிந்த அளவு உதவி செய்வது நேர்மை.

அப்படி வாழ சிறுவயதில் இருந்து பழகிக் கொண்டால் அந்தப் பழக்கம் தன்னையும் உயர்த்தும், நமது குடும்பத்தையும் உயர்த்தும்.

எறும்பு எப்படி நேராக ஒரு இடத்தை அடைகிறது.

பறவை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குச் செல்லும் போது ஒரு ஒழுங்காகப் பறந்து சென்று செல்லும் இடத்தை அடைகிறது.

இது பழக்கத்தால் வரும். இந்த நேர்மையான ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தால் அதில் இருந்து தவற மாட்டார்கள் என்றாள் அம்மா.

இதை எப்படி கற்றுக் கொள்வது என்று ரமா  கேட்டாள்.

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிகளைப் பார்த்து கற்றுக் கொள்வார்கள். நேர்மையாக வாழ்வது நமது பண்பாடு.

ஔவையார் பாட்டி கூட “நேர்பட ஒழுகு” என்று சொல்லி இருக்கிறார்கள் என்றாள் அம்மா.

அம்மா நானும் நேர்மையாக வாழ்வேன் என்றாள் உறுதியான குரலில் ரமா.

என் சமத்துச் செல்லம் என்று அனைத்துக் கொண்டாள் அம்மா.

Share.

Leave A Reply