70-நுண்மை நுகரேல்
திலக் ஒரே பையன். சசியும், சகுந்தலாவும்
மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள்.
நேரத்திற்கு சாப்பிடக் கொடுப்பதற்குப் பதிலாக பிஸ்கட், சாக்லேட், இனிப்புகள், எண்ணெயில் வறுத்த உணவுகளைக் கொடுத்தார்கள்.
திலக் எப்போதும், ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டை
இருப்பான்.
வயிறு சீரணம் ஆகாமல்,
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி அடிக்கடி வரும்.
மருத்துவரிடம் காண்பித்து, மருந்து சாப்பிட்டு குணமாகும். இப்படி அடிக்கடி நிகழ்வதால்….
உடல் ஆரோக்கியம் கெட்டு பள்ளிக்கு விடுமுறை போட வேண்டிய சூழ்நிலையில்
படிக்கவும் முடியாமல் தினருவான் திலக்.
அவன் நிலையைப் பார்த்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு அக்கா சொன்னார்கள்…
சிற்றுண்டிகளை அடிக்கடி தின்னக் கூடாது. தின்றால் நோய் வரும் என்று ஔவையார் அன்றே “நுன்மை நுகரேல்” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
நாம் அவர்கள் சொன்னதை கொஞ்சமாவது கடைப் பிடிக்க வேண்டும் சகுந்தலா!
பையனுக்கு தின் பண்டங்களை அடிக்கடி கொடுக்காதே என்றார்கள்.
சரி அக்கா என்றாள் சகுந்தலா.