ஆத்திசூடி கதைகள்
68- நிலையிற் பிரியேல்

மதுரை மாவட்டத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவர் சந்திரன்.

அந்த கிராமத்தில் பள்ளிக்கூட வசதி இல்லாததால் பக்கத்து ஊருக்கு வந்து படித்து பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்தார்.

தனது தொழில் பக்தியால்  படிப்…படியாக
உயர்ந்து, ஆசிரியர் பணியை மிகவும் சொம்மையாகச் செய்தார்.

தான் பணி புரியும் வேலையாட்கள், மற்றும் அரசியல் உள்பட எல்லா தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கினார்.

தனக்கு என்று எதையும்
எதிர் பார்க்க மாட்டார். தனது கடமையைக் கண்ணாக மதித்து பணிபுரிந்தார்.

ஓய்வு பெரும் நாட்கள் வந்தது. எல்லோரும் மனமில்லாமல் வழி அனுப்பி வைத்தார்கள்.

ஓய்வு பெற்ற பின்பும் தான் வசிக்கும் பகுதிக்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்து வந்தார்.
ஒரு நாள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறைவனுடன் இணைந்து விட்டார்.

ஒருவர் மறைவு எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.
சந்திரன் மறைவும் எல்லோரையும் அழ வைத்தது.

நல்ல மனிதர். எந்த நிலையிலும் பிறருக்காக
யோசிப்பவர், உதவுபவர் என கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

நல்லவன் என்னும் பெயரில் இருந்து நீங்காமல் இருக்க வேண்டும் என்பதை அப்பா வாழ்ந்து காட்டி!
“நிலையிற் பிரியேல்”
என்று ஔவையார் சொன்னது போல் நல்ல பெயர் எடுத்துவிட்டார்,
என்று எண்ணினான் பாலு.

Share.

Leave A Reply