67-நாடொப்பன செய்

சித்திரை மாத கோடை வெயில் சுட்டு எரித்தது.

தள்ளு வண்டியில் காய் விற்பவர், பழம் விற்பவர், வழிப்போக்கர் என வெயில் தாங்க முடியாமல் வெயிலில் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஒரு வீதிக்குள் வரும் போது அங்கு நிழல் தரும்
மரங்கள் வரிசையாக நிழல் தந்து, குளிர்ந்த  காற்று இதமாக இருந்தது.

அந்த வீதிக்கு வரும் வியாபாரிகள் வண்டியை நிப்பாட்டி, சிறிது நேரம் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வியாபாரமும் செய்து கொண்டு செல்வார்கள்.

மரம் நடுவது, குளம் வெட்டி…குளத்தைச் சுற்றி புளிய மரம் நடுவது எல்லாம்…..

நமது முன்னோர்கள் ஆகிய பெரியவர்கள் நாட்டு மக்களுக்காக சிந்தித்துச் செயல் பட்டது,
அவர்களுக்காக  அல்ல!
வருங்கால சந்ததிகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக என எண்ணும்  போது அவர்கள் வழியில் நாமும் சில மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறோம்.
என ஜெயா சொல்லும் போது….

மகன் கோபுவும், ஆமாம் அம்மா!என்றான்.

“நாடொப்பன செய்” என ஔவையார் கூறி இருக்கிறார்கள். எவ்வளவு ஆழமான கருத்து என்று கோபு கூற….

பெரியவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடிய வேலையைச் செய்யும் போது  பிறருக்கும் பயன் படுகிறது, நமக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாள் ஜெயா.

Share.

Leave A Reply