ஆத்திசூடி கதைகள்
41-கொள்ளை விரும்பேல்

தாராவும், அமுதாவும் எதிர்த்த… எதிர்த்த வீட்டில் வசித்து வந்தார்கள்.

அமுதாவின் பெற்றோர் விளையாடுவதற்கு அவ்வப் போது விளையாட்டுப் பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள்.

தாராவும், அமுதா வீட்டிற்கு வந்த விளையாடுவாள். பொம்மைகளை கொடுக்க மனம் இல்லாமல் கொடுத்து விட்டுச் செல்வாள்.

ஒருநாள் அமுதா உடைய பொம்மையை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

வீட்டிற்கு சென்றவுடன் தாராவின் அம்மா இதை ஏன் எடுத்து வந்தாய் எனக் கேட்டாள்.

இந்தப் பொம்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், எடுத்து வந்து விட்டேன் என்றால் தாரா.

இதைக் கேட்ட தாராவின் அம்மா,பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. ஆசைப் பட்டாலும் எடுத்து வருவது திருடுவதற்கு சமம்.

அந்தப் பொம்மையை அமுதாவிடம் போய் கொடுத்து விட்டு வா! என்று அனுப்பி வைத்தாள் தாராவின் அம்மா.

தாராவும் சரி என்று பொம்மையை அமுதாவிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.

புலவர் ஔவையாரும் பிறர் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது. என்பதற்காக “கொள்ளை விரும்பேல்” என்று சொல்லி இருக்கிறார்.

Share.

Leave A Reply