4-ஈவது விலக்கேல் பசுமையான மரங்களும், வயல்களும் இயற்கை அழகும் கொண்ட சிற்றூர் இருந்தது.

  அவ்வூரில் இரண்டு அண்ணன்கள் ஒரு தங்கை என மூன்று குடும்பமும் அம்மா, அப்பா உடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் அந்த கிராமத்திற்கே முன் உதாரணமாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த வீட்டுப் பெண் கலா பெயரில் மட்டும் கலா அல்ல கலகலப்பாக பேசுவதிலும் ‘கலா’ தான்.

அவள் தனக்கு என செலவு செய்வதை விட பிறருக்கு கொடுப்பது அவளுக்கு பிடிக்கும்.

தனக்கு வாங்க கொடுக்கும் பணத்தை அக்கிராமத்தில் பள்ளி படிப்பிற்காக கஷ்டப்படும் மாணவர்களுக்கு கொடுத்து உதவுவாள்.

பசி என்று வருபவர்களுக்கு ஏதாவது முடிந்ததைக் கொடுத்து பசியாற்றுவாள். அதனால், கலாவை எல்லோருக்கும் பிடிக்கும்.

இது பிடிக்காத அண்ணன் மனைவி திலகா, கலா செய்வதற்கு எல்லாம் குற்றம் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு நாள் வள்ளலார் அறக்கட்டளையில்
இருந்து வந்தவர்களுக்கு பணம் கொடுக்க எழுந்த போது கடும் சொற்களால் திட்டினாள் திலகா.

வெளியில் நிற்பவர்கள் காதுகளிலும் விழுந்தது அந்த சொற்கள். அழுகையை அடக்கிக் கொண்டு கலா வெளியில் வந்து பணத்தைக் கொடுத்தாள்.

அவர்கள் முகம் வாடிவிட்டது. அவர்கள் வாட்டத்தை கண்ட கலாவிற்கு அந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை தந்தது.

கொடுக்கும் மனமுள்ள கலாவைப் போன்றவர்களை கொடுக்க விடாமல் தடுப்பவர்களை கண்ட ஔவையார் “ஈவது விலக்கேல்” என்று பாடி உள்ளார்.

Share.

Leave A Reply