37-கூடிப் பிரியேல்

பாலுவும், சீனவும் நல்ல நண்பர்கள். படித்து வேலைக்குப் போன போது ஏற்பட்ட நட்பு.

இருவர் நட்பும் குடும்ப நட்பாக நாளும் வளர்ந்தது.

இன்ப,துன்பங்களிலும் கலந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த நட்பு…

இருவரும் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டது.பாலு சென்னைக்கு மாற்றல் ஆகி போனபின்…

சீனு மைசூர் சென்று விட்டான். அதன் பிறகு சீனிவைப் பற்றி எந்த தகவலும் பாலுவிற்கு தெரியவில்லை.

பத்து ஆண்டுகள் கடந்த போது சீனு இருக்கும் இடம் பாலுவிற்கு தெரிய வந்தது.

தனது நண்பனைப் பார்க்க மைசூர் சென்று விட்டான் பாலு.

சீனுவும் நல்ல நிலையில் இருந்தான் தன் பழைய நண்பனைக் கண்ட சந்தோசத்தில்  தன் மனைவி, குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நல்ல நட்பு என்றும் ஆண்டுகள் கடந்தாலும் பிரியாது என்பதற்கு பாலுவும்,சீனுவும் எடுத்துக்காட்டு.

புலவர் ஔவையாரும் இதைத்தான் “கூடிப் பிரியேல்” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்.

Share.

Leave A Reply