ஆத்திசூடி கதைகள்
36-குணமது கைவிடேல்
காலையில் எழுந்த மஞ்சளா தனது காலை வேலைகளை முடித்துவிட்டு.
குளித்து தலையை துவட்டி முடியின் நுனியில் முடிச்சு போட்டு, மஞ்சள் பூசிய முகத்தில் குங்குமம் வைத்தவள்…
பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூக்களை வைத்து வணங்கி தானும் சிறு துண்டு பூவை தலையில் வைத்துக் கொண்டாள்.
விநாயகர், முருகன் பாடல்களை பாடிய படி வணங்கினாள்.
பக்கத்தில் அமர்ந்து இவற்றைக் கவனித்துக் கொண்டு இருந்த செல்லப் பெண் மீனு…
அம்மா! ஏன் சாமி கும்பிட வேண்டும். என மழலை மாறாத குரலில் கேட்டாள்.
குட்டி தங்கம். மீனு! செல்லம் என்று தூக்கி மடியில் வைத்துக் கொண்ட மஞ்சுளா!
சாமி கும்பிடுவதால் மனம் சாமிகிட்டே ஒருநிலைப்படும். மனம் அமைதியாகி சந்தோசமாக இருக்கும்.
நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதால் சுவாசத்திற்கு நல்லது. சாம்பிராணி, ஊதுபத்தி காட்டுவதால் நல்ல வாசனை இறைவனுடன் நம்மை இணைக்கும்.
இப்படி தினம் செய்யும் போது மகாலட்சுமி நம் வீட்டில் நித்திய வாசம் செய்வாள்.
இப்படி எல்லா வகையிலும் நமக்கு நன்மை தரக்கூடிய இறைவழிபாட்டை ஒருநாளும் கைவிடக்கூடாது. இது நமது பண்பாட்டு குணம். இதை ஒரு நாளும் கைவிடக் கூடாது என்றாள் அம்மா மஞ்சுளா.
சரி அம்மா! நானும் சாமி கும்பிடுகிறேன். என்று அம்மா மடியில் இருந்த மீனா எழுந்து சாமி படத்தை வணங்கினாள்.
ஔவை பட்டியும் “குணமது கைவிடேல்” என்று சொல்லி இருக்கிறார்கள், என்றாள் மஞ்சளா.
