ஆத்திசூடி கதைகள்
  35-கீழ்மை யகற்று

தனமும், மலரும் பக்கத்து பக்கத்து தெருவில் வசிப்பவர்கள்.

பள்ளி விடுமுறையில் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.

ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தனம் தன்னுடன் படிக்கும் மாணவிகளைப் பற்றி குறை சொல்லிக் கொண்டும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டாள்.

அவள் எப்போது பேசினாலும் மற்றவர்கள் குறைகளை மட்டுமே பார்ப்பாள். இது மலருக்கு பிடிக்கவில்லை!

கெட்ட மனிதரிடமும் கூட இருக்கும் நல்ல குணத்தை மட்டுமே பார்ப்பவள் மலர்.

தனத்திற்கு எதிர்மறையானவள் மலர்.

நாட்கள் கடந்தன…. தனத்துடன் பழகுவதை மெல்ல மெல்ல நிறுத்திக் கொண்டாள் மலர்.

பின் தனத்துடன் விளையாடுவதையும் விட்டுவிட்டாள் மலர்.

தனம்! தனக்கு தகுதியான தோழி இல்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் அவள் நட்பை விலக்கி விட்டாள் மலர்.

இக்கருத்தை வலியுறுத்தியே,
ஔவை பாட்டியும் “கீழ்மை யகற்று” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்.

Share.

Leave A Reply