3-இயல்வது கரவேல்

பள்ளி விடுமுறை வீட்டிற்கு முன் சிறுவர், சிறுமிகள் கண்ணைக் கட்டி கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டும், அவர்கள் அம்மாக்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சிறுவன் ராமு கீழே விழுந்து விட்டான். கல் தட்டி கட்டை விரலில் இருந்து ரத்தம் வந்தது.

உடனே, உள்ளே ஓடிய பாரதி, தண்ணீரும், சிறு துணியும் எடுத்து வந்தவள்.. தண்ணீரை குடிக்க கொடுத்தாள். பின் துணியில் தண்ணீரை நனைத்து ரத்தம் வந்த விரலைச் சுற்றி கட்டினாள்.

சிறிது நேரத்தில் சிறுவனின் அழுகையும் நின்றது, ரத்தம் வருவதும் நின்றது. அந்த துணியை எடுத்துவிட்டு

பின் பூண்டும், சர்க்கரையும் நசுக்கி பசை போல் எடுத்து வந்து காயம் உள்ள இடத்தில் தடவினாள் பாரதி.

அவர்களுக்குத் தெரிந்த வைத்தியத்தை மறைக்காமல் உடனே உதவி செய்ததால் மருத்துவ மனைக்குப் போகாமலே குணமாகிவிட்டது.

இதைத்தான் ஔவையார் சொல்லி இருக்கிறார்கள் “இயல்வது கரவேல்”
அதாவது…

உன்னால் முடிந்ததை மறைக்காமல் உதவி செய் என்று.

Share.

Leave A Reply