ஆத்திசூடி கதைகள்

27-வஞ்சகம் பேசேல்

பாலுவும், மதனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.

இருவரும் நன்றாக படிப்பார்கள். பக்கத்து… பக்கத்து வீடு என்பதால் நட்புடன் இருந்தார்கள்.

பாலுவிற்கு பந்து விளையாடுவதில் விருப்பம். அதனால், பள்ளியில் பந்து விளையாடும் குழுவில் சேர்ந்து பயிற்சி எடுத்து போட்டிகளில் கலந்து கொண்டான்.

பாலுவின் விடாமுயற்சி விளையாட்டில் உள்ள ஆர்வம் பல பரிசுகளையும், பதக்கம், விருதுகளை வாங்கித் தந்தது.

மதனுக்கு விளையாடுவது பிடிக்காது. பாலு முதலில் மதனையும்  விளையாட கூப்பிடுவான்.

பாலுவை கிண்டல் செய்வான். வேறு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு புகழ்வது போல் இகழ்வான்.

  பாலு முதலில் நண்பன் தானே என்று கண்டு கொள்ளவில்லை.

பாலு மாநில அளவில் சென்று விளையாட ஆரம்பித்த போது… மதன் மனதில் வஞ்சக எண்ணத்தை வைத்துக் கொண்டு பேச… மதனா இப்படி பேசுகிறான் என்று பாலுவிற்கு கஷ்டமாக இருந்தது.

அவன் வீட்டிற்கு வந்தவுடன் பாட்டியிடம் சொல்லி அழுதுவிட்டான்.

பரவா இல்லை உனக்கு பிடித்த விளையாட்டை விளையாடு நீ வெற்றி அடைவாய். அடுத்தவன் பேச்சுக்கு கவனம் கொடுத்தால் உன்னால் உன் இலக்கை நோக்கி போக முடியாது. என்று பாட்டி ஆறுதல் சொல்ல….

சமாதானம் ஆனான் பாலு.

  மதன் போன்றவர்களைப் பார்த்து தான்…
ஔவையாரும் “வஞ்சகம் பேசேல்” என்று கூறியுள்ளார். 

Share.

Leave A Reply