24- இயல்பலா தனசெயேல்
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு குழுவாக பிரித்து படித்துக் கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.
அதில் சில மாணவர்கள் படிப்பது போல் பேசிக் கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை என்பதால் மறுநாள் புதுப்படம் வந்திருக்கிறது. அதற்கு போகலாமா? என்று ஒருவன் கேட்க…
முதலில் யோசித்தவர்கள் சரி போகலாம் என முடிவு செய்து மறுநாள் படிப்பதற்கு வராமல் படத்திற்குப் போய் விட்டார்கள்.
படிப்பது அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு என்பது தெரிந்தும்.
படிப்பதற்கு மட்டம் போட்டு. படத்திற்குப் போய், பொய் சொல்வது தகாத செயல் என்பதைத்தான்… ஔவையார் “இயல்பலா தனசெயேல்” என்று சொல்கிறார்.