15- ஙப்போல் வளை

ஒரு புறாவிற்கு இறகில் அடிபட்டு விட்டது. அதனால், பறந்து சென்று உணவு உண்ண முடியவில்லை.

அதனுடன் இருந்த உறவு புறாக்கள் அலகால் உணவைக் கொண்டு வந்து அடிபட்ட புறாவுக்கு கொடுத்தன.

அடிபட்ட புறாவும் உணவை உண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

இதைப் பார்த்த ஔவைப் பாட்டி இப்படி நமக்குச் சொல்கிறார்…

தமிழ் எழுத்துக்களில் ‘ஙகர’ வரிசையில் ‘ங’ எழுத்து பயன்படுகிறது.
ஙா, ஙி முதலிய எழுத்துக்களையும் தன்னோடு தழுவிக் கொண்டு இருப்பது போல, உன்னைச் சேர்ந்தவர்களுடன் உறவாக இருக்க வேண்டும் என்கிறார்.

Share.

Leave A Reply