12-ஔவியம் பேசேல்
குமாரும், சிவாவும் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள்.
குமார் முதல் மார்க்கு வாங்குவான். சிவாவும் 90க்கு மேல் வாங்கும் மாணவன் தான்.
இருவரும் நண்பர்கள் என்பதால் இருவரின் அம்மாவும் நட்புடன் பழகி வந்தார்கள்.
வீடுகளுக்கும் போய் வருவார்கள்.
சிவாவின் அம்மா தனது மகனை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மேலும், குமார் முதல் மார்க் வாங்கி விடுகிறான், என்று அவ்வப்போது தனது மகன் முதல் மார்க் வாங்கவில்லை என்பதை பொறாமை கலந்த வார்த்தைகளால் சொல்லுவார்கள்.
போகப்… போக முதல் மார்க்கு வாங்குவான் என்று குமார் அம்மா சொன்னாலும், சிவாவின் அம்மா மனம் சமாதானம் ஆகாது, பொறாமை வார்த்தைகளைப் பேசுவார்கள்.
இதைத்தான் ஔவையார் “ஔவியம் பேசேல்” என்று சொல்கிறார்.
