391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கல்வி கற்கும் வயதில் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். குற்றம் வராதபடி படித்தபின் அதன்படி வாழ்ந்து பெயர் நிலைக்கும்படி தகுதி பெற வேண்டும்.
392.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு .
எண்ணமும் , எண் எழுத்து என்பதும் உடலுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அது போன்று முக்கிய மானது வாழும் மக்களுக்கு .
393.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் .
கண் உடையவர் என்பவர் கற்றவர் ,முகத்தில் கண் இருந்தும் பார்க்க முடியாமல் புண் உள்ளவர் கல்வி கற்காதவர் .
394.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் .
மனக்கருத்தை பிறர் மகிழும்படி சிறப்புடன் கூடிப்பேசி அகம் மகிழ்ந்து பிரிதல் புலமை பெற்றவர் அனைவருக்கும் இயல்பாகும் .
395.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர் .
செல்வம் உடையவர் முன் வறியவர் நிற்பது போல் கல்வி கற்றவர் முன் விரும்பி நின்று பயின்றவரே கற்றவர், கீழ்படியாதவர் கல்லாதவர் .
396.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
தோண்டத் தோண்ட ஊறுவது மணல் கேணி .அது போல மனிதர்க்கு கல்வி கற்க கற்க அறிவு மேம்படும் .
397. யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு .
கல்வி நம் மனதை கட்டக் கூடிய பெருங்கொடை .அதை நாடாதவர் ஊர் மக்கள் வியந்து சந்தனம் போன்று மணம் வீசும் வலிமை பெற முடியாது .
398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறவியின் விழி கண்ணோட்டத்தால் தான் கற்ற கல்வியின் அறிவு ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பாய் உடன் வரும் .
399.தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் .
தான் கற்ற கல்வியால் இன்பம் அடைபவர் அக்கல்வி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டால் விரும்பி ஆய்ந்து அறிந்து கற்றுக் கொள்வர் .
400. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கெடுதல் இல்லாத சிறப்புடைய செல்வம் கல்வி .ஒருவருக்கு கல்வியைத் தவிர மற்ற எதுவும் பெருமை தராது .