351.பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு .
வாழ்க்கையின் பொருள் அறம் செய்து வாழ்வது என்பதை உணராமல் வேறு பொருள் கொண்டு இவ்வுலக இன்பத்தில் மயங்குபவர்கள் ,மீண்டும் பிறக்க நேரும்.
352.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு .
மயக்கம் நீங்கி இவ்வுலகஇன்பம் தரும் குற்றம் இல்லாத வாழ்க்கை கண்முன்பே கைகூடும்.
353.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து .
சந்தேகம் நீங்கி ஞானம் பெற்றவர்க்கு பூமியில் வாழும் போதே விண்ணுலகத்தில் கிடைக்கும் சொர்க்கம் கிட்டும்.
354.ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு .
ஐம்புலன் மயக்க உணர்வில் இருந்து விடுபடாத கண்ணோட்டம் உள்ளவனுக்கு அச்ச உணர்ச்சி உண்மை எதுவும் இருக்காது.
355.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு .
ஒரு பொருள் வாங்கும் போதுவெளித் தோற்றத்தைப் பார்க்காமல், நீண்ட நாட்கள் உழைக்குமா என்பதை அறிந்து வாங்குவதே அறிவாகும் .
356.கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி .
வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டின் உண்மைப் பொருள் அறிந்து வாழ்பவர் மீண்டும் இப்பிறவியில் பிறவா வழிவகுக்கும்.
357.ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு .
ஒருவருடைய உள்ளம் உள் அகம் ஆராய்ந்து உணர்ந்தால் மறுபடியும் ஆன்மா உடலில் பிறக்க வேண்டாம்.
358.பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு .
மீண்டும் பிறவி என்னும் அறியாமை நீங்க வேண்டும் என்றால் உண்மைப் பொருளாகிய கடவுளை ஆராய்ந்து காண்பதே முக்திக்கு வழி.
359.சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் .
பிறப்பு பற்றி உணர்ந்து பிறந்த பயனை எண்ணி வாழ்பவர் வேறு பிறப்பு என்னும் நோய் தொடர்ந்து வராது.
360.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் .
சிற்றின்பம், கோபம், மயக்கம், இந்த மூன்றையும் நினைக்காமல் வாழ்பவரை தீவினை கெடுதல் செய்ய வர முடியாது வருந்தும் , துன்பக் கேடு விலகிப் போகும்.