361.அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
மிகுந்த ஆசை எல்லா உயிர்க்கும் எக்காலத்திலும் உண்டு .தவப்பயன் மறுபிறப்பு உருவாகாத விதை .
362.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் .
விரும்பி வேண்டுதல் பிறவாத வரம் வேண்டும் .வேறு ஆசைகள் வேண்டாமலே வந்து சேர்ந்து விடும் .
363.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அ.’.தொப்பது இல்.
ஆசைகளினால் வரும் தன்மையை அறிந்து ஒதுங்கி வாழ்தலின் சிறப்புக்கு இணை எதுவும் இல்லை.எங்கும் அதற்கு நிகரில்லை .
364.தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்டா வரும் .
தூய்மை என்பது ஆசைப்படாமல் இருப்பது.வாய்மை இறைவனிடம் வேண்ட வரும் .
365.அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையர்
அற்றாக அற்றது இவர் .
துறந்தவர் என்பவர் மிகுந்த ஆசையை துறந்தவர்.மற்றவர் அத்தகைய ஆசையை துறந்தவர் இல்லை .
366.அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
தீமைக்குப் பயந்து வாழ்வதே தர்மம் .ஒருவரை வஞ்சித்து வாழ்வது துன்பம் தரும் .
367.அவாவினை ஆற்ற அனுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
மிகுந்த ஆசைகளை முற்றிலும் துறந்து வாழ்ந்தால் தவப்பயன் விளைவு பகைவர் இடத்தில் இருந்தும் துன்பம் வராது.
368.அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அ.’. துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் .
ஆசை இல்லாதவர்க்கு இல்லாமல் போகும். துன்பம், அந்த ஆசை துண்டிக்கப்பட்டால் தவ வலிமை மேலும் மேலும் வளரும்.
369.இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
இவ்வுலகில் வாழும்போதுஇன்பமே வேண்டும், என எண்ணுபவர்கள் ஆசை என்னும் துன்பம் செய்யும் ஆசைக் கேடு வராமல் செய்ய வேண்டும் .
370.ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் .
பிறந்து தாலாட்டு கேட்கும் இவ்வுலக வழக்க ஆசையை நீக்கிவிட்டால், அந்த நிலை பிறவா பெரிய ஆற்றலைத் தந்து விடும் .