தை முதல் நாள்.
பிரம்மா

போர் செய்யும் கருவியில் இருப்பாய்
போற்றும் நாவில் துணைவி இருப்பாள் சோர்வு இல்லா உழைப்பு தந்து
தொழில் நுட்ப கலையில் இருப்பாய் பார்க்கும் இடத்தில் எல்லாம் இருப்பாய்
பாராட்டும் நெஞ்சில் நிறைந்து இருப்பாய் சார்பு தரும் பிரம்ம தேவா
சரணம் அடைந்தோம் காப்பாய் பிரம்மா

விஷ்ணு

குளிர் காற்று குளிர்ச்சி தர
குளிர்ந்த தண்ணீர் வெது வெதுக்க
தளிர் போல் தழைக்கும் பக்தி
தருகாய் வளர மார்கழி பூஜைசெய்தோம்
நளிர் நளின நளினி தலைவா
நல்லவை செய்யென நாடி வருகிறோம்
களிப்பு கொண்டு வாழ்த்த வருவாய்
மாதவா மனம் மகிழ்வோம் அருளால்

சிவன்

களிகூத்து ஆடும் சிதம்பரம் நடராசா
மாற்றி ஆடிய மதுரை நடராசா
தெளிதல் தரும் நெல்லை நடராசா
குளிர்தல் தரும் குற்றால நாதா
வெளித்து காலைத்தூக்கி ஆடிய திருவாலங்காட்டில்
ஐம்பெரும் சபை கண்டோம் சிவக்கூத்தா குளிர வைத்த முழுமதி மனமே
கொடுத்தாய் சிவனே தில்லை நடராசா.

Share.

Leave A Reply