நம்ம வாழ்க்கையில ரெண்டு விதமா வாழலாம், ஒன்று கவனமோட வாழ்வது மற்றொன்று கவனம் இல்லாமல் வாழ்வது. இன்னிக்கு குழந்தைகள் ஸ்கூல்ல படிக்கிறதா இருந்தாலும், இல்ல பெரியவங்க செய்ற வேலையா இருந்தாலும் எல்லாத்துலயும் கவன சிதறல் அதிகமாக இருக்கிறது. நாம் சின்னதா இருக்கும் போதுல இருந்து எல்லோரும் ஒழுங்கா கவனமா படி, ஒழுங்கா கவனமா வேலை செய், கவனமா இத பண்ணு, கவனமா அதை பண்ணுன்னு சொல்லுவாங்க. ஆனா இதுவரைக்கும் யாராவது ஒரு வேலையை எப்படி கவனமா பண்ணனும் அப்படின்னு சொல்லிக் கொடுத்திருக்காங்களா? இன்னிக்கு நம்ம பள்ளிகளில் ஆசிரியர் குழந்தைகளை போக்கஸ் பண்ணுங்க, நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி படிங்க, நல்ல கவனமா படிங்க அப்படின்னு சொல்றாங்க. என்னைக்காவது இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எப்படி கவனமா படிக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க?கவனமா ஒரு வேலையை எப்படி பண்ணனும்னு தெரியாம நாமளும் கவனமா ஒரு வேலையே பண்ண பழகிக்கிறோம். அப்புறம் ஒரு சின்ன வேலைய பண்றதுக்கு பல…
Author: முருகன்
இவர்கள்…. இந்த நூற்றாண்டில் இளைய தலைமுறை! ஆம் !இவர்கள் இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! நாட்டை காக்க பாடுபட்டது அன்றைய தலைமுறை! உயிரினைக் காக்க பாடுபட்டது இன்றைய தலைமுறை! 40 பேர் ஓர் இடத்தில் கூடி உள்ளன் சங்கமித்து உள்ளனர் விளைவு சங்கம் அமைத்து உள்ளனர் இங்கே இவர்கள் உள்ளங்கள் சங்கமம் ஆகி உள்ளனர். இச்சங்கத்திலிருந்து பிறப்பது சண்டைகள் அல்ல !கூச்சல்கள் அல்ல !விசில் சத்தங்கள் அல்ல !ஆம் இங்கே…. இதயத்தின் துடிப்பு !உயிரின் கீதம் ! ஆம்……மழைத்துளி சேர்ந்தால் வையம் தழைக்கும் !இரத்த துளி சேர்ந்தால் மானிட உடல் தழைக்கும் இவர்கள் செய்தது 100 , 200 யூனிட் ரத்தம் கொடுத்தது இந்த இரத்த துளிகள் என்றும் நிற்கப் போவதில்லை! இலட்சமாகும் வரை ஏன் என்றால் இவர்கள் இலட்சியவாதிகள். ஆம் சிந்தியுங்கள் இந்த இலட்சியத்தில் நமது பங்கு என்னவென்று !இது ஒரு புதிய சாதனை!…
வெற்றின் பாதை எப்போதும் எளிதல்ல என்பது நமக்கு தெரியும். வெற்றி அடைவதற்கு கடின உழைப்பு தேவை படும்கறதும் நமக்கு தெரியும், அப்போ நமக்கு எல்லாமே தெரிஞ்சும் ஏன் வெற்றிய அடையறது இல்ல? ஒரு சின்ன விசயத்த யோசிச்சி பாக்கலாம், வினோத் அவுங்க குடும்பத்தோட பழனிக்கு போகலாமுன்னு பிளான் பண்றான். யோசிச்ச உடனேயே பழனி போக முடிமா? இல்ல, இப்போ வினோத்தொட திட்டமிடுதல் பாருங்க, ஒரு நல்லா நாள் மூடயு பண்ணும், உதரணத்துக்கு மே 20, 21 சனி, ஞாயிறு கிழமை குழந்தைகள்ளு பள்ளி விடுமுறை வீட்டுல மனையோட போசி, மே 20, 21 நாள் மூடயு பண்ணறோம் இப்போ, நம்ம வீட்டுல உள்ள பெரியுங்களுக்கு (அப்பா, அம்மா, அண்ணா) மே 20, 21 பழனி போரும், நீங்களும் வரீங்கள, உங்கள்ளோட பிளான் என்னனு கொப்போம் அப்போறோம், நம்ம நண்பர்களுக்கு போன் போட்டு, பழனி போற பிளான் பத்தி மணி கண்ணக்க போசுவோம், பழனி போய்…
சின்ன வயதிலே எல்லோரும் கிரிக்கெட் விளையாடப் போவாங்க, கால்பந்து ஆர்வமாக விளையாடுவாங்க, ஓட்டப்பந்தயத்திலே எல்லாம் பரிசு வாங்குவாங்க. சின்ன வயதில் பரிசு வாங்குகிற எல்லோரும் ஓட்டப்பந்தய வீரர்களாக வருவது இல்லை. கிரிக்கெட் விளையாடுகிற எல்லோரும் திறமையான விளையாட்டு வீரர்களாக மாறுவதில்லை . கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள், நன்றாகப் படிக்கிற எல்லோரும் நாளைக்கு மருத்துவராகவோ இல்லை என்ஜினீயர் ஆகவோ போகனுமுன்னு கனவு காண்கிறார்கள்., கனவு காணுகிற எல்லோரும் அவர்கள் நினைக்கிற மாதிரி மாறி விடுகிறார்களா ? குழந்தைகளை விடுங்கள், நம்ம வாழ்க்கையிலே நமக்கு எவ்வளவு கனவு, ஒவ்வொரு நேரத்திலும் ஒருவிதமான கனவு, நம்ம காணுகிற கனவு எல்லாம் நடந்து விடுகிறதா? ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாளைக்கு 50,000 எண்ணங்கள் உருவாகிறது, ஒரு நிமிடத்துக்கு 50-60 எண்ணங்கள் நம்ம எண்ணத்தில் உதிக்கிறது, ஒரு நிமிடம் யோசிச்சுப் பாருங்கள், நம்முடைய மூளை எவ்வளவு விசயங்களை உள்வாங்குகிறது. எவ்வளவு விசயங்களை அலசி ஆராய்கிறது. ஒருநாளைக்கு 50,000…
இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு, நாம கத்துக்கிறோமோ இல்லையோ. இந்த வாழ்கை என்பது ரொம்ப ரொம்ப சின்னது, இந்த வாழ்க்கைக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்ன்னு நமக்குத் தெரியாது, இந்த வாழ்க்கைக்குப் பின்னாடி எப்படி இருக்கப்போறமுன்னு நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிஞ்சது, நமக்கு ஞாபகம் இருக்கறது எல்லாம் இப்போ எப்படி நாம வாழ்க்கை வாழ்கிறோம். அதை எப்படி நாம சந்தோசமா கொண்டுபோகிறோம் நம்ம மனசுலே ஒன்றை ஆழமா தெளிவா புரிஞ்சுக்கணும், வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம். எதார்த்தமா வாழ்க்கையை , நம்ம…
இந்த உலகத்தில் நம்முடைய வாழ்க்கைப் பயணம் என்பது மிக மிகச் சிறியது. பூமி எப்படித் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றிவருகிறதோ, எப்படி ஒவ்வொரு கோளும் அதனுடைய பாதையில் பயணிக்கிறதோ, எப்படி ஒவ்வொரு உயிரினமும் அதனுடைய வாழ்கைப் பயணத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறதோ, அப்படித்தான் மனித வாழ்க்கை என்பதும் இயற்கையுடன் ஒன்றிய ஒரு சிறிய பயணம். உண்மையில் இந்த வாழ்கைப் பயணம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னது, நம்ம வாழ்கை யாருக்காகவும் எதற்காகவும் எப்போதும் நிற்காது. வாழ்கை என்பது யாரையும் கேட்காமல் போய்கிட்டே இருக்கும். நமக்குப் பிடிக்குதோ இல்லையோ, மகிழ்ச்சியோ துக்கமோ, வேலை இருக்கோ இல்லையோ, நினைத்தது நடந்த சந்தோசமோ, நம்ம நினைத்தது நடக்காத துக்கமோ , நடப்பது எதுவாக இருந்தாலும் இந்த பூமி சூரியனைச் சுற்றும் வரை, நம்முடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கும் நமக்கே தெரியாமல். இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள், ஒன்று வாழ்க்கை புரியாம வாழ்றவுங்க, மற்றவர்கள் வாழ்க்கையைப்…
இந்த வாழ்க்கை எதாவது ஒன்றை நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கிட்டுத் தான் இருக்கு. அதை நாம் கத்துக்கிறோமா இல்லை கடந்து போகிறோமா என்பது நமது கையிலே தான் இருக்கு ? நம்ம எல்லோரும் வாழ்க்கையில் நாளைக்கு நல்லா இருக்கணும், வாழ்க்கையிலே நாம ஜெயிக்கணும் , வெற்றி அடையவேணும் என்பது தான் குறிக்கோள். நாளை என்பது இன்றில் இருந்து தான் வருகிறது, இன்று நாம என்ன செய்கிறோமோ அது தான் நாளைக்குத் திரும்ப வரும், அது தான் இயற்கையின் நீதி. நம்மளோட கனவை எப்போதும் நெனச்சுப் பாருங்க, அந்த இலட்சியத்தை அடைய என்ன செய்யணும் , எப்படி செய்யணும் என யோசிச்சுப் பாருங்க. ரவி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், ரவி அவனோட கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டான், அவன் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை தேடிக்கிட்டு இருந்தான். அவனுடைய கனவு எல்லாம், சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் சேரனும். படிப்பு…
வெற்றியின் பாதை எப்போதும் எளிதல்ல என்பது நமக்குத் தெரியும். வெற்றி அடைவதற்கு கடின உழைப்புத் தேவைப் படும்என்பதும் நமக்குத் தெரியும், அப்போ நமக்கு எல்லாமே தெரிஞ்சும் ஏன் வெற்றியை அடையறது இல்லை ? ஒரு சின்ன விசயத்த யோசிச்சுப் பார்க்கலாம், விவேக் அவுங்க குடும்பத்தோட பழனிக்குப் போகலாமுன்னு முடிவு செய்கிறான் . யோசிச்ச உடனேயே பழனி போக முடிமா? முடியாது , இப்போ விவேக்கின் திட்டமிடுதலைப் பாருங்க. முதலில் ஒரு நல்ல நாளை முடிவு பண்ணுகிறான் , உதாரணத்துக்கு மே 20, 21 சனி, ஞாயிற்றுக் கிழமை குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை. வீட்டுல மனைவியோட பேசி, மே 20, 21 என்று முடிவு செய்கிறார்கள் .அடுத்து , நம்ம வீட்டுல உள்ள பெரியவுங்களுக்கு (அப்பா, அம்மா, அண்ணா) மே 20, 21 பழனி போகிறோம்\, நீங்களும் வர்ரீங்களா, உங்களுக்கு அப்போது வர முடியுமா ?என்று கேட்போம் . அப்புறம், நம்ம நண்பர்களுக்குத்…
இந்த வாழ்க்கையிலே சந்தோசமா இருக்க எது முக்கியம்? எப்போதாவது யோசிச்சு இருக்கிறீர்களா ? சில பேருக்கு பணம் இருந்தா சந்தோசமா இருக்கலாம், சிலபேருக்கு சொந்த வீடு இருந்தா சந்தோசமா இருக்கலாம், சிலபேருக்கு நல்ல வேலை, சிலபேருக்கு நல்ல குடும்பம், சிலபேருக்கு நண்பர்கள். இப்படி ஒவ்வொருத்தருக்கும் சந்தோசம் வித்தியாசப் படும். என்னதான் இருந்தாலும், எவ்வளவுதான் இருந்தாலும் சந்தோசத்தை அனுபவிக்க நல்ல ஆரோக்கியமான உடம்பு வேணும். நம்ம வாழ்கை நம்ம உடல் சம்பந்தப்பட்டது, நம்ம உடல் நம்ம மனசு சம்பந்தப்பட்டது. உதாரணத்துக்கு, நம்ம தினமும் ஓட்டுற டூ வீலர் வண்டியைப் பார்ப்போம். ஒரு சாதாரண வண்டி நல்லா ஓடனமுனா அதுக்குப் பெட்ரோல் உதவணும், இரண்டு டயர்ல காற்று இருக்கணும், வண்டியோட பிரேக் ஒழுங்கா இருக்கணும், என்ஜின் ஒழுங்கா வேலை செய்யணும், வண்டியை ஆறு மாசத்துக்கு ஒருதடவை சர்வீஸ் பண்ணனும். இத்தனையும் பண்ணுனாத்தான், ஒரு சாதாரண இரு சக்கர வாகனம் ஒரு இடத்திலே இருந்து இன்னொரு…
வெற்றி என்பது என்ன அவ்வளவு சுலபமான ஒன்றா ? வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன கண்ணை மூடிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியைத் தொட்டுவிட்டார்களா ? நம்மில் நிறையப் பேர் நினைத்துக்கொண்டு இருக்கோம், வெற்றிங்கிறது என்னமோ ஒரு சாலையைக் கடந்து ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போகிறமாதிரிதான் என்று… நம்முடைய மனசு வெற்றி அடைஞ்சவங்களைப் பார்த்து ஏங்குகிறது, நம்முடன் படிச்ச பையன் இன்றைக்கு நல்ல வேலையில் இருக்கான், நன்றாகச் சம்பாதிக்கிறான். நம்ம வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கவில்லையே, நம்ம வாழ்க்கையிலே எப்போ ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறதுஎன்று காத்துக்கொண்டு இருக்கிறோம் . அவனுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு, எதை பண்ணினாலும் ஜெயிக்கிறான். நம்ம வாழ்க்கையிலே ஏன் அந்த அதிர்ஷ்டம் வரலேன்னு இராத்திரி பகலா யோசிக்கிறோம். கோயில் கோயிலா போய் என்ன என்னமோ பண்ணி அந்த அதிர்ஷ்ட தேவதை நம்ம வாழ்க்கையிலே வர ரொம்பவே கஷ்டப்படுகிறோம். நல்லா யோசிச்சுப்பாருங்க வெற்றி என்பது ஒரு நேர்…