சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் வேலை. 1000 புத்தகத்தை படித்திருப்பார்கள், 500 சொற்பொழிவுகளை கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே இருப்பார்கள். உண்மையா சொன்னா, எதை தேடறோமுன்னு தெரியாம தேடிகிட்டே இருப்பாங்க. இவங்களோட வாழ்கை, காலையில இருந்து தூங்கப் போகிற வரை பயங்கர பிஸியா இருக்கும், ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமா பேசக்கூட முடியாது, நிக்காம தேடிக்கிட்டே இருப்பாங்க. இவங்க படிச்ச புத்தகத்தில் இருந்த விசயங்களை, இவங்க கேட்ட விசயங்களைப் பத்தி, கூட இருக்கிறவக கிட்ட, இப்படி பண்ணினா நல்லா இருக்கும், அப்படி பண்ணினா நல்லா இருக்கும், அந்த மகான் இப்படி சொன்னாரு, என எதையாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. எதையாவது வாழ்க்கையில சாதிச்சே ஆகணும், நம்ம புள்ளைக கஷ்டப்படக் கூடாது, நம்ம குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க. நம்மள்ள எத்தனை பேரு நம்ம வாழ்க்கையில நடக்கிற விசயங்களுக்கு…