இந்த வாழ்க்கை எதாவது ஒன்றை நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கிட்டுத் தான் இருக்கு. அதை நாம் கத்துக்கிறோமா இல்லை கடந்து போகிறோமா என்பது நமது கையிலே தான் இருக்கு ?
நம்ம எல்லோரும் வாழ்க்கையில் நாளைக்கு நல்லா இருக்கணும், வாழ்க்கையிலே நாம ஜெயிக்கணும் , வெற்றி அடையவேணும் என்பது தான் குறிக்கோள்.
நாளை என்பது இன்றில் இருந்து தான் வருகிறது, இன்று நாம என்ன செய்கிறோமோ அது தான் நாளைக்குத் திரும்ப வரும், அது தான் இயற்கையின் நீதி. நம்மளோட கனவை எப்போதும் நெனச்சுப் பாருங்க, அந்த இலட்சியத்தை அடைய என்ன செய்யணும் , எப்படி செய்யணும் என யோசிச்சுப் பாருங்க.
ரவி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், ரவி அவனோட கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டான், அவன் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை தேடிக்கிட்டு இருந்தான். அவனுடைய கனவு எல்லாம், சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் சேரனும். படிப்பு முடிஞ்ச உடனே அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கவில்லை , சொந்த ஊரில் ஒரு சின்னக் கம்பெனியில் தான் வேலை கிடைச்சது.
ரவியும் அந்த சின்ன வேலையில் சேர்ந்தான், ஆனா அவனோட மனசு மட்டும் அவனோட கனவை மதிக்கறதா இல்லை, அவனோட ஆழ்மனதில் அவனோட வேலை இது இல்லை, அவனோட வேலை என்பது மிகப் பெரிய கம்பெனியில் சென்னையில் தான் வேலை.
சின்ன வேலையில் இருந்துக்கிட்டே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் எல்லாப் பத்திரிகையில் வரும் விளம்பரத்தைப் பார்த்து. எல்லாப் பெரிய கம்பெனிக்கும் வேலைக்கு முயற்சி பண்ணினான். சில கம்பெனியில் இருந்து முதல் ரவுண்ட் இன்டர் வியூக்கு வரச் சொன்னாங்க, ஆனா எங்கேயும் வேலை மட்டும் தரவில்லை ..
நம்ம ரவி மட்டும் மனம் தளராம இன்னும் பல கம்பெனிக்கு வேலைக்குச் சேருவதற்கு தன்னோட விருப்பத்தை அனுப்பிக்கிட்டே இருந்தான். அப்படியே, இன்னும் அதிக கவனமாக இப்போ செய்கின்ற சின்ன கம்பெனிவேலையையும் திருப்தியாகச் செய்தான் , சின்ன கம்பெனி வேலையாக இருந்தாலும் அதுலே இருந்தும் பல விசயங்களையும் கத்துக்கிட்டான் .
நம்ம செய்கின்ற வேலை சின்னதாக இருந்தாலும், பிடித்திருந்தாலும் பிடிக்காமல் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயம், ஏதாவது ஒரு புது விசயம் இருக்கத்தான் இருக்கும். நாம தான் அதை கத்துக்கணும்.
சின்னச் சின்னதாக கத்துக்கிட்ட அனுபவத்தில் இருந்து ரவி இப்போ பெரிய கம்பெனி இன்டர்வியூவில் நல்லபடியாகச் செய்தான், அவனோட கனவு வேலை இப்போ அவனுக்கு கிடைத்தது.
-
எந்த வேலையும் நல்ல வேலைதான், ஏதாவது ஒரு விசயத்தை நாம கத்துக்கலாம். நாம விரும்பின வேலை நமக்கு கிடைக்கிறவரை, நமக்கு கிடைத்த வேலையில் இருந்து நாம விரும்பின வேலையை நோக்கிப் போகணும், இதை நம்ம வீட்டு சின்னப் பையனுக்கும், பொண்ணுக்கும் சொல்லி வளர்க்கணும்.
2. உங்க ஆழ்மனசோட கனவை அடைகின்ற வரைக்கும் முயற்சி செய்துகிட்டே இருங்க இன்றைக்கு எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருந்து நாளைக்கு எங்கே போகணும்னு நெனைக்கிறீங்களோ அதற்கானப் பயணத்தை செய்துகிட்டே இருங்க. உங்க கனவை ஒருநாள் நிச்சயம் அடைவீங்க.