இந்த வாழ்க்கையிலே சந்தோசமா இருக்க எது முக்கியம்? எப்போதாவது யோசிச்சு இருக்கிறீர்களா ? சில பேருக்கு பணம் இருந்தா சந்தோசமா இருக்கலாம், சிலபேருக்கு சொந்த வீடு இருந்தா சந்தோசமா இருக்கலாம், சிலபேருக்கு நல்ல வேலை, சிலபேருக்கு நல்ல குடும்பம், சிலபேருக்கு நண்பர்கள். இப்படி ஒவ்வொருத்தருக்கும் சந்தோசம் வித்தியாசப் படும்.
என்னதான் இருந்தாலும், எவ்வளவுதான் இருந்தாலும் சந்தோசத்தை அனுபவிக்க நல்ல ஆரோக்கியமான உடம்பு வேணும். நம்ம வாழ்கை நம்ம உடல் சம்பந்தப்பட்டது, நம்ம உடல் நம்ம மனசு சம்பந்தப்பட்டது. உதாரணத்துக்கு, நம்ம தினமும் ஓட்டுற டூ வீலர் வண்டியைப் பார்ப்போம். ஒரு சாதாரண வண்டி நல்லா ஓடனமுனா அதுக்குப் பெட்ரோல் உதவணும், இரண்டு டயர்ல காற்று இருக்கணும், வண்டியோட பிரேக் ஒழுங்கா இருக்கணும், என்ஜின் ஒழுங்கா வேலை செய்யணும், வண்டியை ஆறு மாசத்துக்கு ஒருதடவை சர்வீஸ் பண்ணனும். இத்தனையும் பண்ணுனாத்தான், ஒரு சாதாரண இரு சக்கர வாகனம் ஒரு இடத்திலே இருந்து இன்னொரு இடத்துக்குப் போறதுக்கு பயன்படும்.
ஒரு உயிர் இல்லாத வண்டிக்கே இவ்வளவு பண்ணினாத்தான் நல்ல நிலையில் ஓடும். அப்போ, அந்த வண்டிய ஓட்டுற, உயிர் உள்ள, யோசிக்கத் தெரிஞ்ச இந்த உடம்பை நாம எப்படி ஆரோக்கியமா பாத்துக்கிறோம்? நம்மள்ள 90 சதவீதம் பேரு உயிரில்லாதப் பொருளுக்குக் கொடுக்கிற கவனத்தை, உயிரோட இருக்கிறவங்களுக்குத் தருவது இல்லை.
சின்ன விசயம், நீங்க நல்லா இருந்தா தான், உங்களோட கனவுகளை நோக்கிப் போகமுடியம். உங்களுடைய நல்ல கனவுகள் தான் வெற்றியின் கதவுகள். வெற்றி என்பது ஒரு தன்னம்பிக்கை. உங்களுக்கு நீங்களே தரும் உத்வேகம். வாழ்க்கை என்பது ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல, மிக நீண்ட பயணம்.
இந்த நீண்ட பயணத்திலே உங்களோட பயணிக்கிறது, உங்களுடைய கனவுகளுக்கு உருவம் தருவது, உங்களுடைய கடின உழைப்பிற்கு உறுதுணையாக இருப்பது உங்களுடைய உடம்புதான். ஆரோக்கியமான உடம்பும், ஆரோக்கியமான மனதும் தான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.
அதனால தான் மனித உடலை கோவிலுடன் இணைத்துப் பார்த்தனர். நம்முடைய முன்னோர்கள். இந்த உடம்புக்குள்ளே எதைக் கொடுக்கிறோமோ அதைப் பொறுத்தே நம்முடைய உடல் ஆரோக்கியம் இருக்கும். அளவுக்கு அதிகமா சர்க்கரை சாப்பிட்டா , சர்க்கரை வியாதி வந்துவிடும். அளவுக்கு அதிகமா நொறுக்குத்தீனி சாப்பிட்டு வந்தால் , உடல் பருத்து பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
வெற்றிக்கோ , இல்லை வெற்றியை சந்தோசமா அனுபவிக்கிறதுக்கோ நல்ல ஆரோக்கியமான உடல்நிலை வேணும். வெற்றிக்காக இரவும் பகலும் முயற்சி பண்ணினாலும் , உங்க உடலை கொஞ்சம் அக்கறையோட கவனித்துக் கொள்ளுங்கள் .உங்களோட உடல் ஆரோக்கியத்தை பொறுத்துத்தான் உங்களோட வாழ்கை நகரும்.
முயற்சி செய்யவும் :
-
கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்க உடல் ஆரோக்கியம் எப்படி இருக்குனு பாருங்க. கொஞ்ச நேரம் ஓடுறதை நிறுத்திட்டு, உங்க மனைவியிடமோ, உங்க நலம் விரும்பியிடமோ உங்க உடல் ஆரோக்கியத்தைப் பத்தி பேசுங்க. உங்களுக்கு நீங்களே பரிசோதனை செய்து பாருங்க, உங்க உடம்பு எவ்வளவு ஆரோக்கியமா இருக்குனு தெரியா வரும்
-
நம்ம வீட்டுச் சின்ன பையனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம்னு சொல்லிக் கொடுங்க. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற போதை பழக்கம் எவ்வளவு தீமை தரும் என்பதைச் சொல்லி கொடுங்க.அப்போதுதான் அவர்கள் வளரும் போது, அவர்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்காம இருப்பாங்க.அதற்குப் பெற்றோர்களும் முன்உதாரணமாக இருந்து வழிகாட்ட வேண்டும்.