வெற்றியின் பாதை எப்போதும் எளிதல்ல என்பது நமக்குத் தெரியும். வெற்றி அடைவதற்கு கடின உழைப்புத் தேவைப் படும்என்பதும்  நமக்குத் தெரியும், அப்போ நமக்கு எல்லாமே தெரிஞ்சும் ஏன் வெற்றியை அடையறது இல்லை ?

ஒரு சின்ன விசயத்த யோசிச்சுப் பார்க்கலாம், விவேக் அவுங்க குடும்பத்தோட பழனிக்குப் போகலாமுன்னு முடிவு செய்கிறான் . யோசிச்ச உடனேயே பழனி போக முடிமா? முடியாது , இப்போ விவேக்கின்  திட்டமிடுதலைப் பாருங்க.

முதலில் ஒரு நல்ல நாளை முடிவு பண்ணுகிறான் , உதாரணத்துக்கு மே 20, 21 சனி, ஞாயிற்றுக் கிழமை குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை.

  • வீட்டுல மனைவியோட பேசி, மே 20, 21 என்று  முடிவு செய்கிறார்கள் .அடுத்து , நம்ம வீட்டுல உள்ள பெரியவுங்களுக்கு (அப்பா, அம்மா, அண்ணா) மே 20, 21 பழனி போகிறோம்\, நீங்களும் வர்ரீங்களா, உங்களுக்கு  அப்போது  வர முடியுமா ?என்று கேட்போம் .
  • அப்புறம், நம்ம நண்பர்களுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு , பழனி போறது பற்றி  மணிக் கணக்கா பேசுவோம், பழனி போய் என்ன பார்க்கலாம்,எப்படி போகலாம் , கடைசி தடவை அவன் பழனி போனப்ப , அவனுடைய அனுபவம் எப்படி இருந்தது.?
  • நம்ம வேலை செய்யும் இடத்திலே இருந்து, பழனி போறதுக்கு வேண்டி விடுமுறை  அனுமதி வாங்குறது
  • பஸ் செலவு, பழனியில தங்குற  செலவு, சாப்பாட்டுச் செலவு அப்படி இப்படின்னு ஒரு சின்ன வரவு-செலவு கணக்கையே போட்டு பார்த்திடுவோம்

பக்கத்தில் உள்ள   பழனி போறதுக்கே இவ்வளவு திட்டமிடல் இருந்தா. வாழ்க்கையிலே ஒரு பெரிய இலட்சிய, இலக்கை நோக்கி பயணிக்கவேண்டும் என்றால்  எவ்வளவு திட்டமிடல் வேண்டும் …

சின்னச் சின்ன விசயத்துக்கு  நன்றாகத்  திட்டமிடுகிற நாம், பெரிய விசயங்களுக்கு  நல்லா திட்டம் போடுறது இல்லை, அங்கே தான் நம்ம பிரச்சனையே இருக்கு.

பழனிக்குப் போறதுக்கு திட்டமிடுகிற நாம், நல்ல வேலையை கண்டுபிடிக்கிறது, நல்ல வாழ்க்கைத்துணையை கண்டுபிடிக்கிறப்ப திட்டமிடுவது இல்லை, ஏன்னா நமக்குச் சின்னதுல இருந்து யாரும் சொல்லித்தருவது இல்லை, வாழ்க்கையிலே எது முக்கியம், எது முக்கியம் இல்லை இந்த காரணத்தை , தெரிஞ்சுக்கிறது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.

இரண்டு விசயங்களை செயல்படுத்திப் பார்ப்போம்,

  1. கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து எது உங்களோட இலட்சியம், எதை நோக்கிப் போகிறோம் என்று   யோசிச்சுப் பாருங்க.? உங்களோட இலட்சியம் எவ்வளவு முக்கியம் என்று  முடிவுபண்ணுங்க.  உங்களோட இலட்சியத்தை அடைய என்ன என்னத் திட்டம் இருக்குன்னு ஒரு தாளில்  எழுதிப் பாருங்க, உங்களுக்கே தெரியும் உங்களுடைய தகுதி என்ன, உங்களை இன்னும் எப்படித் தயார் படுத்தனும் என்று …

  2. சின்னச் சின்ன விசயங்களை உங்கள் குழந்தைகளைத் திட்டமிடச் சொல்லுங்க, எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னாடி, அந்த வேலையோட முக்கியத்துவம் என்னன்னு கண்டுபிடிக்கச் சொல்லுங்க.  இன்றய குழந்தைகள்தான் நாளைய சமுதாயம்,  அவுங்களுக்குத் திட்டமிடல் பற்றிச் சொல்லிக் கொடுங்க, அவுங்களோட சேர்ந்து சின்னச் சின்ன விசயங்களைத் திட்டமிடுங்க.

வாழ்க்கையிலே  எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்ற காரணத்தை குழந்தைகளுக்குச்  சொல்லிச் சொல்லி வளருங்கள் .

Share.

Leave A Reply