-
கிருஷ்ணரின் கீதை
பகுதி -18ஞான யோகம் -தொடர்ச்சி
குருவிடம் உபதேசம் பெற்றுக் கொண்டு தன் திறமையில் செருக்குக் கொள்பவருக்கோ, குருவைத் தவிர மற்றொருவரிடம் விசுவாசம் கொள்பவருக்கோ குரு கிருபையின் உண்மையான ஆசீர்வாதம் கிடைக்காது
ஆனால் ,அர்ஜுனன் குருவாக ஏற்றுக் கொண்டதுடன் கிருஷ்ணனையே சரணாகதி அடைந்ததாகக் கூறுவதால் ,…
பகவான் எவ்விதத்தில் உயர்ந்தவர் சக்தி படைத்தவர் என்று உணர்ந்து அவரிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்வதைத் தான் ‘சரணாகதி’ என்றும் ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்றும் கூறுவர்.
சர்வ வல்லமை படைத்தவர் அனைத்தும் அறிந்தவர், அனைவர் உள்ளத்திலும் உறைபவர்,அளவற்ற நற்குணங்களின் கரையற்ற கடல்,எல்லாவற்றிற்கும் அதிபதி, தனக்கு வேறு புகலிடமில்லை. ஞானம், சக்தி, அன்பு இவற்றைக் கொடுக்க வல்ல இறைவனை நினைத்து அவருடைய திருவடிகளில் கிடத்தி விட்டு புத்திமதி கூறுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தன் மனநிலையை வெளிப்படுத்தினான்.
எனது புலன்களை வாட்டுகின்ற சோகத்தை விலக்கி ,நான் எப்போதும் சுகமாக இருக்க வழி கூறுங்கள்,என கேட்கிறான் அர்ஜுனன். (போல்ட் டைப் )
சாகசத்துடன் தனது ரதத்தை இருபடைகளுக்கும் இடையே கொண்டு நிறுத்துங்கள் என்று கிருஷ்ணனிடம் கூறிய அர்ஜுனன்…
இப்போது இரு படைகளிலும் கூடியிருக்கும் உறவினர் கூட்டத்தைப் பார்த்து வருந்தி கலங்கும் அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன் பேசினார்.
‘’சூரவீரத்தனத்தை வெளியிட வேண்டியதற்குப் பதிலாக மேலே சொன்னவாறு வருந்திக் கொண்டிருக்கிறானே, என்னை சரணடைந்து புத்திமதி கேட்கிறானே ,
என் தீர்மானத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்னமேயே யுத்தம் செய்யமாட்டேன் என்று முழக்கம் செய்துவிட்டானே, இவையெல்லாம் எத்தகைய தவறு’’ என்று கிருஷ்ணன் மனதிற்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டு இனி வருமாறு கூறினார்.
‘’கவலையுற்ற அர்ஜுனன் கிருஷ்ணனை சரணடைந்து தம்முடைய ஆழ்ந்த சோகம் எப்படித் தீரும்’’என்று உபாயம் கேட்கிறான்.
மேலும், ‘’இவ்வுலகிலும் ,பரலோகத்திலும் ராஜ்ய சுகத்தைப் பெறும் இந்த சோகத்திலிருந்து மீள முடியும் என்று தோன்றவில்லை, என்று சொன்னவுடன் அர்ஜுனன் தமது உபதேசத்திற்குத் தகுதி பெற்றுவிட்டான் என்று கணித்த கிருஷ்ணன்,
அர்ஜுனனுடைய கலக்கத்தையும் ,சோகத்தையும் முற்றிலுமாகப் போக்கிவிடும் உத்தேசத்தோடு கிருஷ்ணன் இவ்வாறு கேட்டார்.
‘’அழிவற்ற நித்ய வஸ்து எது?’’
‘’அழியக்கூடிய அநித்ய வஸ்து எது ?’’
என்பதை விளக்குவதன் மூலம் ஸாங்க்ய ரீதியில் கூட யுத்தம் புரிவது அவசியம் தான் என்று நிரூபிப்பதற்காக ‘’ஸாங்க்ய’’ நிஷ்டையை வர்ணிக்கிறார்.
அர்ஜுனா, நீ துக்கப்பட வேண்டாதவர்களுக்காகத் துக்கப்படுகிறாய், பண்டிதர்களைப் போல் பேசுகிறாய் என்ற கிருஷ்ணன் ,
மேலும்கூறலானார்,’’ தந்தை பாட்டனார் இறப்புக்காக வருந்துகிறாய்.யுத்தத்தில் குலம் அழியுமே என வருந்துகிறாய்,உற்றார் உறவினர்களுக்காக கவலைப் படுகிறாய்.இவர்கள் இல்லாமல் இராஜ்யம் பெற்று என்ன செய்யப் போகிறோம் என கலங்குகிறாய்.குலம் அழிந்தால் பெண்கள் கெட்டுவிடுவார்களே என பயப்படுகிறாய் இவ்விதமாகப் பண்டிதர்கள் கவலைப் படுவதில்லை.
ஏனெனில் ,பண்டிதர்களின் நோக்கில் சத், சித், ஆனந்தமயமான பரம்பொருள் ஒன்றுதான் .அழியாத நித்ய வாஸ்தாக இருப்பது ஆத்மா.ஆத்மா எவ்விதத்திலும் நாசம் அடையாது’’.
உடம்பாகிய சரீரம் அழியக் கூடியது .அதுதான் அநித்யம் .உடலுக்கும் ,ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு கனவு போலக் கற்பனையானது .பின் ஏன் வருந்த வேண்டும்? நீயோ வருந்துகிறாய்.எனவே நீ அறிஞன் அல்லன்.அறிஞனைப் போலப் பேசுகிறாய் அவ்வளவுதான் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும் கூறுகிறார்,’’அர்ஜுனா ,எவர் அழிந்து விடுவார்கள் என்று நினைக்கிறாயோ,அவர்கள் அனைவரும் நீயும், நானும் கூட இல்லாமல் போகமாட்டோம்.
இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்த பிறகும் நாம் இருப்போம்.உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது.நசித்து விடுவார்களோ என்று ஐயப்படுவதும்,வருந்துவதும் தேவையில்லாதது’ என்கிறார் கிருஷ்ணன்.
ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும்,வாலிபப் பருவமும் முதுமையும் வருகின்றனவோ, அவ்வாறே வேறு உடலும் ,வந்து சேர்கிறது. இவ்விசயத்தில் தீர்க்கதரிசிகள் கலங்குவதில்லை.
ஆத்மா, நிரந்தரமானாலும், விகாரமற்றதானாலும் உற்றார்,உறவினரோடு ஏற்படும் சேர்க்கையும் ,பிரிவும் சுக, துக்கங்கள்; நேரிடையாக உண்டாகத்தானே செய்கின்றன?
ஆகவே, சோகப்படாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுவதால், சேர்க்கை,பிரிவு எல்லாம் கூட அநித்யம்தான். எனவே, அவற்றைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.’’ .என்று ஆணையிடுகிறார் கிருஷ்ணன்.
புலன்களுடன் போகப் பொருட்கள் சேர்வதால் சுகமும், துக்கமும் ஏற்படுகின்றது.அந்த சேர்க்கையும் கூட நொடியில் மறையக் கூடியது .
இதில் ஒரு துளி கூட உண்மையான சுகம் இல்லை.அவற்றைப் பொறுத்துக் கொள்.அவை அளிப்பவை என்றறிந்து அவை வந்தாலும், போனாலும் விருப்பு, வெறுப்புகளையோ, மகிழ்ச்சி, துன்பங்களையோ அடையாதே…
உற்றார்,உறவினரின் சேர்க்கை கூட இப்படித்தான் மனமும்,புலன்களும் சேர்ந்து மற்ற பொருட்களுடன் கூட விலகுவது போலத்தான் உறவினருடன் கூடிப் பிரிவதும்…..
எல்லாவிதமான சேர்க்கையினாலும், பிரிவினாலும் ஏற்படும் சுக துக்கங்களையும் பொறுத்துக் கொள் அர்ஜுனா, என்கிறார் கிருஷ்ணன்.
தீர மானிடன் சுகத்தையும், துக்கத்தையும்பேதபாவனையின்றி ஒன்றாக ஏற்பான், அவற்றை அழிபவை என உணர்ந்து இரண்டையும் சமமாக பாவிப்பனே தீரன்.
அவன்தான் இவற்றைப் பொறுத்துக் கொள்ள சக்தி உள்ளவன்,என்னை அடையும் மார்க்கம் தெரிந்தவன்.அவனே தீரன் என்கிறார் கிருஷ்ணன்.
மாறிக் கொண்டே இருக்கக்கூடிய உடல்,புலன்கள்,புலன் நுகர் பொருட்கள் மற்றும் ஜடப் பொருட்கள் அனைத்தும் அழியக் கூடியவை.
எப்போதும் இருப்பதாகத் தோன்றும் அனைத்தும் அதற்கு முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப் போவதில்லை.இருப்பதாகத் தோன்றும் போதுகூட அவை உண்மையில் இருப்பதில்லை.
எனவே ,பீஷ்மர்,துரோணர் ,உறவினர்களுக்காக நீ வருந்தத் தேவையில்லை.மாறிக் கொண்டே இருப்பவை எவையும் எல்லா காலங்களிலும் இருப்பதில்லை.
அழிவற்றதுதான் என்று அதை அறிந்து கொள். அழிவற்றதற்கு ,,அழிவை உண்டாக்குவதற்கு எவரும் ஆற்றல் பெற்றவரல்லர் .
ஆகயத்தினால் மேகம் போல இந்தப் பரமாத்மா தத்வத்தினால் ஜடவர்க்கம் அனைத்தும் சூழப்பட்டுள்ளது.ஆகவே, அந்த ஜடவர்க்கத்தைச் சார்ந்த எதுவும் பரமாத்மாவை அழிக்க முடியாது.
அழிவற்ற விளக்க முடியாத நிரந்தரமில்லாத ஜீவாத்மாவினுடைய இந்த அனைத்து உடல்களும் அழியக் கூடியவை.பரதகுலத் தோன்றலே ,அர்ஜுனா, நீ போர் புரிவாயாக என்கிறார் கிருஷ்ணன்.
உடல் அழியக் கூடியது.அதன் அழிவு தவிர்க்க முடியாதது .ஆத்மா நித்யமானவன். அவனுக்கு அழிவே கிடையாது.எனவே ,நீ யுத்தத்திலிருந்து பின் வாங்குவது சரியல்ல என்று இடித்துரைக்கிறார் கிருஷ்ணன்.
எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள்.
ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை ,யாராலும் கொல்லப்படுவதுமில்லை .’’ஆத்மா’’ இறப்பதாகவோ,அல்லது கொல்வதாகவோ நினைப்பது அஞ்ஞானம் தான் என்று சமாதானம் கூறுகிறார் கிருஷ்ணர்.
கீதை தொடரும்.
================================================================