
சோம.சந்திரன்,எம்.ஏ,
தினத்தந்தி ஆசிரியர்,
ஸ்ரீ ஐஸ்வரியம் ஆசிரியர், சக்திநகர் சங்கம்தோற்று
வித்த தலைவருக்கு,
நினைவு அஞ்சலி !
உழைப்பவர் மதிக்கும் தினம் மே
படைக்கும் இறைவனுக்கு ஐந்து தொழில்
கழை துளைபோட இசை வரும்
காற்றில் இசை பரவுவது போல்
உழைத்து உயர்ந்த உத்தமர் நீங்கள்
உமது புகழ் மறைந்தும் வாழ்கிறது
தோழமை மனங்களில் சிம்மாசனம் இட்டு
ராஜாவாக வாழ்கிறீர் தனியிடம் பிடித்து.
இல்லம் நிறைந்து எங்கும் நீங்கள்
என்ன செய்தாலும் அதில் நினைவு
நல்ல செயல்கள் என்றும் நிலைக்கும்
விதைத்த விதைகள் வளர்ந்து கொண்டு பல்லாண்டு வாழ்ந்த பேரு பெற்றீர்
பரமன் பாத அடி அடைந்து
அல்லல் படும் பிறவி இல்லாமல்
நல்லவை செய்து பெயர் பெற்றீர்
வாழ்க்கை என்னும் சக்கரத்தில் வாழ்வது
சுற்றும் பூமியின் சுழற்சியில் சுழன்று காழ்த்தல் அன்பு மறக்கா மனம்
கடத்தும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மூழ்கும் பணியில் உறைந்து போனாலும்
உருவம் இல்லா உறவில் வாழ்ந்து
தாழ்ந்து பணிந்து வணங்கி வாழ்கிறேன்
தவ வாழ்வை ஏற்று வாழ்கிறேன்.
நீங்கா நினைவுடன்
அன்பு மனைவி ச. மல்லிகா
5.5.2024