நேற்று11-3-2025 மாலை நல்ல காற்று வீசியது. அணில் கூண்டில் இருந்து அணில் குட்டி கீழே விழுந்து விட்டது.
தேவகி மைந்தன் கிருஷ்ணனை வாசுதேவர் கூடையில் வைத்து எடுத்து சென்றது போல்.. அணில் குட்டியை கூடையில் வைத்து எடுத்து வீட்டுக்கு வந்தேன்.
ஆணிலுக்கு சிறிது பால் புகட்டி பத்திரமாக வைத்திருந்தேன். பின் நல்ல மழை பெய்தது.
மழை நின்றவுடன் கூடையுடன் அணில் குட்டியை தாய் அணில் இருக்கும் பகுதியில் வைத்தேன்.
குட்டி அணிலைக் கண்ட தாய் அணில். வாயில் கவ்விக் கொண்டு கூண்டுக்குள் எடுத்துச் சென்று விட்டது.
தாயிடம் குட்டி அணில் பத்திரமாக சென்றுவிட்டது.
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ கிருஷ்ணா!
ஓம் நமோ ராமா!
