15-உடைகளைத் தேர்வு செய்வது :-குழந்தைகளின் உடலை மென்மையான காட்டன் துணிகளிலே மூடி வைப்பது நல்லது. குழந்தைகள் உடுத்தியிருக்கும் உடைகள் நனைந்திருந்தால் உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றவில்லை என்றால் சளி போன்ற நோய்கள் தாக்கும். எனவே, உடனே மாற்றுவது நல்லது.
கால நிலைக்கு தக்கபடி உடைகளை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். கோடை காலத்தில் கை இல்லாத முழுவதும் மூடாத உடைகளை அணிய வேண்டும்.
குளிர் காலங்களில் கைகளை மூடும் நீளமான உடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உடைகளை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஓரளவு தொள.. தொள..உடைகளையே அணிவிப்பது ஏற்றதாகும்.
குழந்தைகளின் தினசரி தேவைக்காக அதிக விலை கொடுத்து உடை வாங்க வேண்டிய அவசியம் அல்ல. ஏனெனில் குழந்தை வளர்ச்சியால் சில மாதங்களிலேயே அந்த ஆடையைப் போட முடியாமல் போய்விடும்.
குழந்தைகளின் உடைகளில் பட்டன், சிகினா அதிகம் இருந்தால் குழந்தை கை, கால்களை உதைத்து விளையாடும்போது அவை காயங்களை ஏற்படுத்தி விடும்.
அது போல் குழந்தைகளுக்கு ஆபரணங்கள் அணியும்போதும் கவனமாக இருக்க வேண்டும். இறுக்கமான ஆபரணங்களை அறிவிக்க கூடாது.
தொடர்ந்து சாக்ஸ், தொப்பி தொடர்ந்து அணிவிக்க கூடாது.
மிக இறுக்கமானதாகவும் இருக்கக் கூடாது.
சின்ன சின்ன விபரங்கள் தான். ஆனால், குழந்தையின் ஆரோக்கியம் இதில் அடங்கியுள்ளது.