11-தாய்ப்பால் அவசியம்
தாய்ப்பாலில்” லேப்பா தெரின்” என்ற பொருள் இருப்பதாக முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளார்கள்.
இது “வைரஸ்களை அழிக்கிறது” என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
அதாவது, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ்களிடம் இருந்து குழந்தைகள் பாதுகாக்கிறது தாய்ப்பால்.
“ ரோட்டோ” எனப்படும் வைரஸ் ஆறு மாதங்களில் இருந்து மூன்று வயது வரையிலான குழந்தைகளை தாக்கி வயிற்றுப் போக்கு ஏற்படுத்துகிறது. இதனால், குழந்தைகள் மரணம் அடைகிறார்கள்.
தாய்ப்பாலில் உள்ள “லோக்டோ தெரின்” வைரசை எதிர்ப்பதால் மரணத்தில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள். இதனால் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் புரிகிறது.
தாய் சந்தோசத்துடன் குழந்தையை இருகைகளாலும் அரவணைத்து நெஞ்சோடு சேர்த்து அனைத்து பாசத்துடனும் மனநிறைவுடனும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது தான் பால் நன்றாக சுரக்கும்.
தாய்ப்பால் அதிகரிக்க நாம் சாப்பிடும் உணவில் இரும்பு சத்து, கால்சியம், புரதச்சத்து, வைட்டமின்கள், தாது சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ள உணவை உண்ண வேண்டும்.
பால், தயிர், பருப்பு, பூண்டு, வெள்ளை முள்ளங்கி, கீரை, ராகி, மீன், முட்டை இவற்றில் தாய்ப்பால் அதிகரிக்கும் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது.
குழந்தை பால் குடித்தவுடன் தோளில் சாய்த்து போட்டு முதுகை தடவி கொடுத்து ஏப்பம் விடச் செய்ய வேண்டும். பால் கொடுத்த உடனே குழந்தையை குளிப்பாட்டக் கூடாது. அவ்வாறு குளிக்க வைத்தால் பால் ஜீரணம் ஆகாமல் குழந்தைகள் பாலை கக்கிவிடும்.
தாய்ப்பால் ஆறு மாதம் வரை கொடுப்பது அவசியம். ஒரு வயதுக்குள் தாய்ப்பாலை மறக்கச் செய்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல் தாய்ப்பாலும் அளவுடன் தான் கொடுக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. மந்த புத்தி ஏற்படும். என்று நம் நாட்டில் சொல்வார்கள்.
இங்கிலாந்து ஆராய்ச்சியோ “கார்டியோ வஸ்டுலா” என்ற நோயில் சிக்குவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதனால், தாய்ப்பால் அளவுடன் கொடுத்து வளமாய் வாழ வழி வகுக்க வேண்டும் .ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சகல சத்துக்களும் நிறைந்து இருப்பது தாய்ப்பாலில் தான்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எளிதில் செரித்து சீரணம் ஆகும். குழந்தைகளுக்கு முழு உணவு தாய்ப்பாலாக அமைகிறது. குழந்தைக்கு ஏற்படும் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலுக்கு இருப்பதால் குழந்தை பிறந்தவுடன் எவ்வளவுக்கு எவ்வளவு தாய்ப்பால் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
சீம்பால் என கொடுக்காமல் விடுதல் கூடாது. அப்பால் கொடுப்பதால் குழந்தை பிறக்கும் போது குடித்திருக்கும் தேவையில்லாதவைகள்
“அக்கி” வெளியில் வந்துவிடும். தாய்ப்பால் பருகுவதன் மூலம் இதமான அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைப்பதை குழந்தை உணருகின்றது.
தாய்க்கும், சேய்க்கும் அன்பும் ,அரவணைப்பும் அதிகப் பிணைப்பும் உண்டாகிறது. எந்த நேரத்திலும் மிகத் தூய்மையாக புதிதாக சுரக்கும் பால் அன்னையின் தாய்ப்பால் இதற்கு விலை அன்பு தான். அதனால், தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் புட்டி பால் பருகிய குழந்தையை காட்டிலும் தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்களாய் வளர்கிறார்கள்.
மன அமைதியுடனும் மன மகிழ்ச்சியுடனும் பால் கொடுக்க வேண்டும் என்ற ஆவலும் தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொண்ட தாயால்தான் தன் குழந்தைக்கு நன்கு பால் புகட்ட முடியும்.
மன அழுத்தம் மன அமைதி இன்மை பால் எனக்கு சுரக்காது என்ற அவநம்பிக்கை கொண்டவர்கள்.
பால் கொடுதால் அழகு கெட்டுவிடும் எந்த மனநிலையில் இருந்தால் பால் சுரப்பதும் குறைந்துவிடும். குழந்தையும் பால் பருக மறுத்து விடும். எனவே, குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அமைதியான மனதை பெற வேண்டும். அவசர அவசரமாக பால் தரக்கூடாது, பால் சுரக்கும் தன்மை மன ஓட்டத்தை சார்ந்திருப்பதே இதற்கு காரணம். வேலைகளுக்கு இடையில் தர வேண்டும் என்றால் வேலைகளை சற்று நிறுத்திவிட்டு பால் தர வேண்டும்.
வேலை கவனத்தில் ஒரு பக்கம் மட்டும் பால் தாய்ப்பால் கொடுத்துவிட்டு சென்றால் மறுபக்கம் பால் கட்டிக் கொள்ளும். பாலை குழந்தை குடிப்பது நல்லது அல்ல .எனவே, பால் கொடுக்கும் போதே இரு பக்கமும் மாற்றி மாற்றி கொடுப்பது தாய்க்கும், சேயிக்கும் நல்லதாகும். பால் கொடுத்து முடிந்தவுடன் குழந்தை வாயையும், மார்பகத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் தாயும், சேயும் பால் வாடை இல்லாமல் சுகாதாரமாக இருக்க முடியும்.
ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பின் மசித்த வேக வைத்த உணவுகளை சிறிது… சிறிதாக கொடுக்க வேண்டும். 9 ,10 மாதங்கள் ஆகும் போது எளிதாக சீரணிக்க கூடிய சமைத்த உணவுகளை பகலில் கொடுக்க வேண்டும். இரவில் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
சத்து மாவுகள் வீட்டில் தயார் செய்த அவற்றை கொடுக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.
சத்து மாவு தயாரிக்க வேண்டிய பொருள்கள்:- கோதுமை, கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயறு, சோயா பீன்ஸ், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரிசி பொரி, பாதாம் பருப்பு, இவைகள் எல்லாம் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோல் நீக்கிய சுக்கு, ஏலம், ஓமம் 25 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகளை ஊற வைக்க வேண்டும். மறுநாள் தண்ணீரை வடிகட்டி ஈரத்துணியால் சுற்றி வைக்க வேண்டும். அடுத்த நாள் முளைக்கட்டி இருக்கும் தானியங்களை உலர்த்தி லேசாக வறுத்து எடுக்க வேண்டும் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு மாவை எடுத்து காய்ச்சிய பால் சேர்த்து சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு இவற்றில் ஏதோ ஒன்றை சேர்த்துக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
எல்லாவித சத்துக்களும் சிறுகச் சிறுக கொடுப்பதால் ஆரோக்கியமாக குழந்தை வளரும்.” நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
“குழந்தையே செல்வம்” அக்குழந்தை நோயில்லாமல் வளர்ந்தால் இரட்டிப்பு செல்வங்களுக்கு சமம். ஆரோக்கிய குழந்தையை அமைதியான வாழ்விற்கு வழி வகுக்கும்.