ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது அதற்குத் தெரியாது.

ஆனால் ,பசித்தவுடன் பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அந்தக் குழந்தைக்கு இறைவன் இயல்பாக கொடுத்திருக்கிறான்.

பசித்த உடன் பால் குடிக்கிறது. குழந்தை வளர… வளர தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என தேவையானவற்றை கேட்டு வாங்கி வளர்கிறது.

பின்பு படித்து தொழில் செய்யும் போது தனக்குப் பிடித்ததை தேர்வு செய்கிறதா? என்றால் “ஆம் “என்று சொல்வதை விட “இல்லை” என்று சொல்வது அதிக பேர் இருக்கலாம்.

ஏன் இந்த நிலை! தனக்கு பிடித்த ஒன்றைத் தேர்வு செய்வதே மனநிறைவான ஒரு வாழ்க்கையாக அமையட்டும்.

எப்படி தேர்வு செய்வது? என்று யோசனை உங்கள் முன் நிற்கும். நாம் சாதிக்க என்ன செய்யலாம்?

முதலில் ஒரு மனிதன் தனக்கு என்ன பிடிக்கும். எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் என்று தன்னைத்தானே தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மற்றவர்களைப் பற்றி அலசுவது என்றால் மிகவும் விருப்பம்.

ஆனால், தனக்கு என்ன பிடிக்கும். தனக்கு என்ன வரும்! வராது! என்பதை முதலில் கவனமாக தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு மனிதன் தம்மை
உணர்ந்து கொண்டான் என்றால், எது குறை !எது நிறை! என்று அவனால் தீர்மானிக்க முடியும்.

இந்த மனநிலை மனதில் வருவதற்கு பல துன்பங்கள், இன்னல்கள் ,இவற்றைக் கடந்து விமர்சனங்கள் இவற்றை கடந்து தான் அவன் வர வேண்டும்.

எனவே, மனிதனின் மனதில் குறைகள் இருப்பது இயல்பானது. இவை தாழ்வு மனப்பான்மையை காட்டும் சற்றென்று கோபம் வருதல் மற்றவரின் முன்பாக பேசுவதற்கு தயக்கம் காட்டுதல் போன்றவை அவரவர் வாழ்க்கை சூழலின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
அதனை மாற்ற வேண்டும்.

உங்களை மாற்ற நீங்கள் முயற்சித்தால் மட்டுமே முடியும். உதாரணமாக தூக்கணாங்குருவி அழகாக மாடிவிடு போல கூட்டை கட்டும். ஆனால், ஆறறிவு படைத்த மனிதனால் அந்த கூடை கட்ட முடியாது.

தேன் கூடு விந்தையான ஒன்று அதுவும் அந்த தேன் ஈக்களால் கட்டுவது போன்று மனிதனால் ஒரு கூடு கட்ட முடியாது.

மனிதனால் ஒரு துறையில் சிறப்பாக தன்னை நிலை நிறுத்த முடியும். உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆற்றல் படைத்தவர்களே! அதற்கு அவர்களுக்கு அயராத சக்தி மனப்பூர்வமான விடா முயற்சி செய்தால் அவர்கள் அந்தத் துறையில் வெற்றி பெற முடியும்.

நமது மனதில் ஆற்றலையும் வானத்தில் உள்ள ஆற்றலையும் இன்னும் அளவிட்டு கூற முடியாதது. ஏனென்றால், அது அளவிட முடியாத அப்பாற்பட்டது.

சாதனைகளை செய்து மனித சமுதாயத்தை உயர்த்த ஒவ்வொருவரும் பிறப்பெடுத்தவர்கள். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும் .

உலகம் வசப்படும் என்பதில் ஐயமில்லை. எண்ணமே செயலாக மாற்றுங்கள். இல்லை என்றால் நீங்கள் எண்ணியதை செய்ய முடியாமல் வேறு துறையில் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டு உங்களுக்கு மனநிறைவு தராத ஒரு தொழிலை செய்து கொண்டு இருப்பீர்கள்.

உங்களுக்குப் பிடித்த விதமான செயல்களை செய்து கொண்டிருந்தால் அந்தத் துறையில் நீங்கள் வெற்றிகரமாக சாதிக்க முடியும்.

உங்களுக்குப் பிடித்த ஒன்றை சாப்பிடும் போது உங்கள் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரியும். மன மகிழ்ச்சியில் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

அதுபோல்தான் உங்களுக்கு பிடித்த செயல்களை, தொழில்களை செய்யும் போது உங்கள் மனமும், மகிழ்ச்சியில் உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

எனவே ,உங்கள்எண்ணத்திற்கு முதலில் மதிப்பு கொடுத்து உங்களை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும். ஒரு துறையில் நீங்கள் கால் பதிக்கும் போது அதில் பல பல கருத்துக்கள் சொல்வார்கள்.

பயமுறுத்துவார்கள், அதில் நம்பிக்கை இல்லாத வார்த்தைகளை சொல்லுவார்கள், உங்கள்…. நீங்கள் தான் “நான்” இந்த துறையில் வெற்றி பெறுவேன். என்ற மனநிறைவுடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குப் பிடித்த துறையில் வெற்றி பெற அடுத்தடுத்த முயற்சிகளை நீங்கள் செய்யும் போது அந்த துறையில் கண்டிப்பாக ஒரு நாள் நீங்க வெற்றியாளராகவே ஆகி இருப்பீர்கள்.

இது உலகில் மாற்றுவதற்கும், மாறுவதற்கும் நிறைய உள்ளன .எனவே, உங்கள் தலைவிதி உங்கள் கையில் தான் உள்ளது.

அதை நிர்வாகிப்பது உங்கள் திறனை நிறைவாக மாற்றிக் கொண்டு உங்களை தன்னைத் தானே அறிந்து கொண்டால் தரணியில் உயரலாம்.

Share.

Leave A Reply