ஆத்ம சம்பந்த யோகம்

கேசவா,மனிதன் தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே பகைவன் என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்


மனிதன் உலகியலில் பழகுவதால் பற்றுக் கொண்டு யாரை நண்பர்களாக ஏற்கிறானோ அவர்கள் பந்தத்திற்குக் காரணம் ஆவதால் உண்மையில் அவர்கள் நண்பர்கள் அல்லர்.


சாதுக்கள், மகாத்மாக்கள், தன்னலம் இல்லாத சாதகர்கள் இவர்கள் தான் பந்தத்தில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருப்பார்கள் இவர்கள் தான் உண்மையான நண்பர்கள் .


அவர்களிடம் சிரத்தையும், அன்பும் கொண்டு அவர்களால் சொல்லப்பட்ட வழியில் செல்கிறானோ அப்போதுதான் அவர்களுடைய நட்புறவு அவனுக்கு கிடைக்கும் .
இந்த ரீதியில் பார்க்கும்போது தனக்குத்தானே நண்பனாக முடியும் என்பது புரியும்.


ஆன்மீக நிலையில் கேடு விளைவிக்க முடியாது.ஆகையால் தானே தான் தனக்குப் பகைவன் ஆகிறான் .
தன் மேன்மைக்காகப் பாடுபடுபவன் தனக்குத் தானே நண்பன் ஆகிறான். எனவே தனக்குத் தானே நண்பனும் பகவனும் அவனே என விவரிக்கிறார் கிருஷ்ணன் .


மேலும் , எந்த ஜீவாத்மாவினால் மனம் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப்பட்டிருக்கிறதோ அந்த ஜீவாத்மா தனக்குத் தானே நண்பன்..
மனம், புலன்களுடன் கூடிய உடலை அடக்கி ஆளாதவன் தனக்குத் தானே பகைவன் தீமை செய்வதில் செயல்படுவான் .
மான, அவமானம் தட்ப வெப்பம் , இன்பம் துன்பம் ஆகியவற்றில் எவனுடைய மன நிலை மிகவும் அமைதியாக இருக்கிறதோ….


அந்தமனிதன் தன்னை அடக்கி வெற்றி கொண்டு ஞானத்தில் சத், சித் ஆனந்தமயமான பரமாத்மாவில் நன்கு நிலைத்து நிற்கிறான் .


அதாவது அவனுடைய அறிவில் பரமாத்மாவைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்கிறார் கிருஷ்ணன் .
மேலும், எவரது உள்ளம் ஞானத்தாலும்,விஞ்ஞானத்தாலும் நிறைந்து திருப்தியாக இருக்கிறதோ, எவர் தம் நிலையில் இருந்து எந்த சூழ்நிலையிலும் விகாரமின்றி இருக்கிறாரோ எவர் தம் புலன்களை நன்கு அடக்கி வசப்படுத்தி உள்ளாரோ அவர் ….


மண், கல், பொன் ஆகியவற்றில் சமபாவனை கொண்டு பகவானை அடைந்த யோகி ஆகிறார்.
தன்னலம் கருதாது அனைவருக்கும் நன்மை செய்பவன் நண்பன் பகைவன் என்பது இல்லாது நடுநிலையில் நிற்பவன்…
இரு பிரிவினருக்கும் நன்மையைநாடுபவன்,வெறுக்கத்தக்கவன், உறவினர் ஆகியவர்கள் இடத்தும், நல்லோர்களிடத்தும், பாவிகளிடத்தும் கூட சமமான பாவனைகொண்டுள்ளவன் மிகவும் சிறந்தவன் ஆகிறான் என்கிறார் கிருஷ்ணன்


கேசவா/ ‘சமபாவனை’ உள்ளவனை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதனை விவரியுங்கள் என்கிறார் அர்ஜுனன் .

அர்ஜுனா/ நண்பர்கள் , உறவினர்களிடம் இயல்பாகவே அன்பு இருக்கும்.அது போல சத்ருக்கள் பாவிகள் இடத்தில் வெறுப்பும், அருவருப்பும் இருக்கும் .


அர்ஜுனா/ நண்பர்கள் ,உறவினர்களிடம் இயல்பாகவே அன்பு இருக்கும் . அதுபோல சத்ருக்கள் பாவிகள் இடத்தில் வெறுப்பும், அருவருப்பும் இருக்கும்.


இவ்வாறு முரண்பட்ட இயல்புடைய மனிதர்களிடம் வெறுப்பு இல்லாதிருத்தல் மிகவும் கடினம் அவர்களிடம் கூட சமபாவனை இருந்துவிட்டால் பிறகு மற்ற இடத்திலும் சமபாவனை இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


எந்த சமயத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் , எந்த ஒரு காரணத்திற்காகவும் வேற்றுமை உணர்ச்சி தோன்றவில்லையோ அவனே சமபுத்தி உடையவன் என்று அறியவேண்டும் என்கிறார் கிருஷ்ணன் .


மேலும் மனம், புலன்களுடன் கூடிய உடலை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத யோகி தனி ஒருவனாகத் தனியான இடத்தில் அமர்ந்துகொண்டு ஆத்மாவை இடைவிடாது பரமாத்மாவிடம் இணைக்க வேண்டும்.


தூய்மையான இடத்தில் தரைமீது தர்ப்பை , மான்தோல், துணி இவற்றில் ஒன்றின் மேல் ஒன்றாக விரித்து மிக உயரமாக இல்லாமலும், மிகத் தாழ்வாக இல்லாமலும் தன்னுடைய இருக்கையை அசைவற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.


அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மனம் புலன்களின் செயல்களை வசத்தில் வைத்துக் கொண்டு , மனதை ஒருமுனைப்படுத்தி உள்ளத்தூய்மைக்காக யோகத்தைப் பயில வேண்டும் என்கிறார் கிருஷ்ணன் .


கேசவா/ ஆசனத்தை அமைத்துக் கொள்ளும் விதத்தையும், அமர்ந்து ஆனதை ஒருமுனைப் படுத்துவதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா/ தியானயோகம் புரியத்தக்க இடம் இயல்பாகவே பரிசுத்தமாக இருக்க எண்டும். அந்த இடத்தை கூட்டித் துடைத்து தூய்மையாகவும், மாசற்றதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் .


புனிதத்தலங்கள் , பூங்கா, மாசற்ற காற்று வீசுகிற இடங்களில், நதிக்கரைகளில் , மலைக்குகை, தேவாலயம் , எது எளிதாக் கிடைக்கிறதோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


அமர்வதற்கு வசதியாகப்பலகை அல்லதுகல்லினால் செய்யப்பட்ட இடம் ஆசனம் ஆகும்.


அந்த இடம் உயரமாக இருந்தால் தியானத்திற்குத் தடையாகச் சோம்பலோ , தூக்கமோ, நேரும்போது தடுமாறி விழுந்து காயம் ஏற்படலாம்.


மிகத் தாழ்வாக இருந்தால் தரையில் ஈரம் ,வண்டுட, எறும்பு , புழுக்கள் இவற்றால் இடையூறு ஏற்படலாம்.
ஆகவே ஆசனம் அதிக உயரமாகாவோ, தாழ்வாகவோ இருக்கக் கூடாது . கல், பலகை இவற்றில் உட்காரும்போது ஆசனம் சொரசொரப்பாக ஐருந்தால் கால்களுக்கு வலியைக் கொடுக்கும்.
ஆகவே, அதற்கு மேல் தர்ப்பம், மான்தோல், துணி இவற்றை விரிக்கவேண்டும்.


மான்தோலுக்குக் கீழே தர்ப்பத்தை விரித்து விட்டால், அது விரைவில் வீணாகாது . மேலே துணியை விரித்து விட்டால் அதன் ரோமங்கள் உடலில் ஒட்டாது .


அதனால் தான் மூன்று விதமான விரிப்புகள் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது .
மான் தோல், தானாக மரித்த மானுடையதாக இருக்க வேண்டும் வேட்டையாடப்பட்ட மானுடையதாக இருக்கக் கூடாது .


இம்சையினால் பெறப்பட்ட மான் தோல் தியானத்திற்கு உதவாது . மான் தோல் கிடைக்காத நிலையில் கம்பளி ஆசனத்தைப்பயன்படுத்தலாம்.


பிறருடைய ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யக் கூடாது என விவரிக்கிறார் கிருஷ்ணன் .


கேசவா/ மனதை ஒருமுகப்படுத்துவது என்பதையும், உள்ளத்தூய்மைக்காக தியானம் செய்வதுபற்றியும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா/மனதின் ஓட்டத்தைச் சிதறவிடாமல் ஒருநிலைப்படுத்துவதுதான் ஒருமுனைப்படுத்துவதாகும் . தியான யோகப் பயிற்சியின் நோக்கம் உலக சித்திகளைப் பெறுவதற்காகவோ , ஐசுவர்யத்தைப் பெறுவதற்காகவோ இருக்கக் கூடாது .


பரமாத்மாவை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இருக்கவேண்டும், மனதை தன் வசப்படுத்தி மனதை பரமேசுவரன் பால் ஈடுபடுத்தி இடைவிடாது எப்பொழுதும் சிந்திப்பதே தியானப்பயிற்சியாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .


அர்ஜுனா உடல், தலை , கழுத்து இவற்றைச் சீராகவும் , அசைவற்றதாகவும் வைத்துக் கொண்டு அசையாமல் திடமாக இருந்து கொண்டு மற்ற திசைகளைப் பாராமல் தன்னுடைய நாசியின் நுனியின் மீது பார்வையை ஒரு முனைப்படுத்து என்கிறார் கிருஷ்ணன்.


கேசவா உடல் தலை, கழுத்து இவற்றைச் சீராகவும் அசையாமலும் நிலைப்படுத்தி வைத்துக் கொள்வது எப்படி என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா தொடைக்கு மேல் கழுத்துக்கு கீழே உள்ள உடலின் பாகத்தைக் ‘காயம்’ எனப்படும்.அதற்கு மேல் கழுத்து அதற்கு மேல் இருப்பது தலை.
இடுப்பும் வயிறும் முன்னோ பின்னோ , இடதுபுறமோ, வலது புறமோ சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
முதுகுத் தண்டை நேராகவும் கழுத்து சாயாமலும் தலையைத் திருப்பாமலும் ஒரே சீராக வைத்துக் கொண்டு அசையாமல் இருக்க வேண்டும். இதுதான் சீராகவும் அசையாமலும் இருப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன் .
கேசவா உடல் அசையாமலும் திட்டமாக இருக்க வேண்டும் என்பதையும் நாசியின் நுனியில் பார்வையை ஒரு முனைப்படுத்து என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா உடல் அசைந்தாலும் திடமாக இருக்காவிடினும் தியானத்திற்கு உதவியாகாது.


கண்களை மூடக்கூடாது. இங்கும் அங்கும் பார்வையை செலுத்தக் கூடாது என்பதற்காக மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்த வேண்டும் என்றேன்.பார்வையை பரமேசுவரன்பால் அங்கு செலுத்த வேண்டுமே தவிர மனம் பரமேசுவரன் பால் ஒன்றி இருக்க வேண்டும் மூக்கின் நுனியில் அன்று என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா ஆசன முறைகள் சகுண சிரம்ம தியானத்தின் பொருட்டா அல்லது நிர்குண பிரம்ம தியானத்தின் பொருட்டா கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா ஆசன முறை எல்லோருக்கும் அவசியம் வேண்டும் . அவர் அவர் விருப்பத்தையும் தகுதியையும் பொறுத்தது என விவரித்த கிருஷ்ணன்….


அர்ஜுனா பிரம்மச்சரிய வரத்தில் நிலைத்து நின்று அச்சமின்றி நன்கு மன அமைதி பெற வேண்டும் தியான காலத்தில் விழிப்புணர்வோடு கூடிய யோகி தன் மனதை அடக்கி என்னையே மனதில் நினைத்தவனாக என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக் கொண்டு நிலைபெற்று இருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன் .


கேசவா பிரம்மச்சர்ய வரத்தைக்கடைப்பிடிப்பதைப் பற்றி விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா ‘பிரம்மச்சர்யம்’ என்பது தத்வார்த்தம் வேறொன்றாக இருந்தாலும் உடலின் விந்துவைக் (சுக்லத்தை) கட்டுப்படுத்துவதாகும் .


ஆரியப் பண்பாட்டின் நான்கு ஆசிரம நிலைகளில் அடிப்படை முதலாவது பிரமச்சாரிய ஆசிரமமே ஆகும்.
பிரமச்சர்யக் கட்டுப்பாடுகளை மேற் கொண்டு ஒருவன் உண்மையில் சுக்லத்தை நன்குகாப்பாற்றிவிட்டால்…..
சுக்லத்தின் மூலம் உடலுக்குள் ஒரு தனிப்பட்ட மின்சார சக்தி உண்டாகிறது .அதனால் ஏற்படும் உடல் வலிமை, மன வலிமை, ஆத்ம வலிமையும் தாமாகவே நிலைத்து விடும் அளவுக்கு ஆற்றல் மிக்கதாக இருக்கும் .


பரமாத்மாவின் பால் இயல்பாகவே மனதின் ஓட்டம் திசை திரும்பும் ஒருமுனைப்புடன் மனம் பரமாத்மாவில் ஒன்றுவது தான் தியானம் .


திருமணம் புரிந்து கொண்டுமனைவியுடன் கூட ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் அளவோடு உறவாடுவது கூட பிரம்மச்சரிய நிலைதான் .


அதுவும் தியானத்திற்குப் பெரிதும் உதும் தியான யோக சாதனை புரியும் வரை முதலில் இருந்தே பிரமச்சரியக் கட்டுப்பாடுகளைத் தளராமல் காப்பாற்றி வருபவனுக்கு விரிவாகும் எளிதாகவும் தியான யோகம் பயன் அளிக்கும் .
இக்காலத்தில் எவ்வளவு முயன்றாலும் தியானம் நிலைப்பதில்லை என்பதற்கு காரணம் மனம் பகவானிடம் நிலைத்து இருப்பதில்லை .சுக்லாம் கட்டுப்படுத்தாததுதான் தியானம் நிலைப்படுத்த முடியாமைக்கு காரணமாகிறது .


பிரம்மச்சாரி ஒவ்வொருநாளும் நீராடவேண்டும். சந்தனம், மை ,தைலம் , அத்தர் போன்ற வாசனைப் பொருட்களைத் தீண்டக் கூடாது. சுகபோகங்களை அனுபவிக்கக் கூடாது. பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது. பெண்களைப் பற்றி வீண் பேச்சுபேசக்கூடாது . அளவோடு எளிய உணவை உண்ண வேண்டும். மிருதுவான ஆடைகளை உடுத்தக் கூடாது .ரிஷிகள் , பெரியோர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.


யாரிடமும் விவாதம் செய்யக் கூடாது .யாரையும் நிந்திக்கக் கூடாது உண்மைபேச வேண்டும். யாரையும் அவமதிக்கக் கூடாது அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
காம, குரோதங்களைத் துறக்க வேண்டும். தனியாகப் படுக்க வேண்டும். சுக்லம் ஒருபொழுதும் வெளிப்படக் கூடாது .இந்தக் கட்டுப்பாடுகளை நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்.


இதுவே பிரம்மச்சரிய விரதமாகும். ஆசிரமங்களிலும் கடைப்பிடிக்கும் பிரம்மச்சரிய தர்மமாகும் .இதை திடமாகக் கடைப்பிடிப்பதே அதில் நிலை பெறுவதாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
தொடரும்

Share.

Leave A Reply