
சிந்தனைகள்
முடிந்த பின் விதி என்று
பெருமூச்சு விடுபவர்கள் தான்
இங்கு உண்டு
துவங்கும் முன்னே விதியை எண்ணி
மார் உயர்த்தி நடப்பவர் யார் ?
முடிந்த பின் தொலைத்துவிட்ட
கனவை எண்ணி பெருமூச்சு
விடுபவரே /
துவங்கும் முன்னே கனவு கண்டு
சரியாய் பாதை அமைக்க வில்லையா ?
முடிந்த பின் ஏன் இத்தனை
விமர்சனம்
துவங்கும் போது என்ன செய்து
கொண்டு இருந்தாய்
துவக்கங்கள் தான்
முடிவுகளைத் தீர்மானிக்கும்
ஏன் முடிந்த பிறகு துவங்கியதைப்
பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறாய் ?
துவங்கும் போதுஎதைப் பற்றியும்
யோசிக்காதே நீ
முடிந்த பிறகுதான்
எல்லாவற்றையும்
செய்கிறாய் ?
விடிந்த பிறகுதான்
போனதைப் பற்றி
யோசிக்கிறாய்
படிப்பு முடிந்த பிறகுதான் வேலையைப்
பற்றி சிந்திக்கிறாய்
ஓய்வூதியம் வரும்போது தான் வங்கி
கணக்கைப் பார்க்கிறாய்
வாழ்ந்து முடிந்த பின்பு தான்
பகவத் கீதை கூட படிக்கிறாய்
எல்லாம் முடிந்த பின்பு தான் ‘
செய்கிறாய்
இதெல்லாம் துவங்கும் முன்னே
யோசிக்க வேண்டியவை
என்ன சிரிகிறாய் ?
எல்லோரும் செய்வதால்
நீ செய்வதும் சரி என்றா ?
நான் சிரிக்கிறேன்
முடிந்த பிறகு என்ன செய்ய
வேண்டும் என்பதே உனக்கு
தெரியாது என்று
அதை அறிந்து கொள்ள
முதலில் எல்லாவற்றையும்
சரியாய் துவங்கு
————————கவிஞர் சி.எம்.பாலகிருஷ்ணன் , சென்னை ———-
புரட்சிப் பெண்

சின்ன சின்ன பாப்பா
செய்தி ஒன்னு சொல்லேன்
நல்லா நீயும் கேட்கணும்
மனதில் பதிய வைக்கணும்
அன்பாய் நீயும் பழகணும்
பண்பில் சிகரம் தொடணும்
பொறுமை யாக இருக்கணும்
பொறாமை தீயை விலக்கணும்
மனித நேயம் வளர்க்கணும்
நட்பாய் உலகில் வாழணும்
பெரியோர் சொல் மதிக்கணும்
அவர் வழியில் நடக்கணும்
தன்னலம் என்பதை மறக்கணும்
பிறநலம் பேணி காக்கணும்
அநீதி கண்டால் எதிர்க்கணும்
புரட்சிப் பெண்ணாய் திகழணும்
——————————–கவிஞர் ச. மல்லிகா எம்.ஏ.,——————————-