பலவிதமான பக்தி நிலை
இறைவன் மேல் தாம் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு, நம்பிக்கையே பக்தி எனப்படுகிறது.கடவுள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு பதினோரு வகையான நிலைகளில் உள்ளது.
1.குணபக்தி
இறைவன் புல், பூண்டு ,விலங்கு,பறவை,மனிதன் என அவர் படைத்திருக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்க்கும் போது அற்புதங்கள் பல இருக்கும்.
சிறு பூச்சியில் இருந்து மனிதன் வரை ஒவ்வொரு உயிர் வாழ்வதற்குத் தகுந்தபடி உடலையும்,உணர்வுகளையும் படைத்திருக்கும் மகிமையை நினைத்து பக்தி செலுத்துவது குண மகிமைகளின் பக்தி எனப்படுகிறது.
2.உருவ பக்தி
இறைவன் பல கடவுள்களாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.அவர் அவருக்கு பிடித்த உருவத்தை மனதில் நினைத்து வணங்கும் பக்திக்கு சவுந்தர்ய உருவ பக்தி எனப்படுகிறது.
3.பூசையில் பக்தி
இறைவனை சிந்தையில் நிறுத்தி அபிசேக,ஆராதனை செய்து,பூக்களால் அலங்காரம் செய்து தூப,தீப ஆராதனைகள் செய்து உள்ளம் நெகிழ்ந்து இறைவன் மேல் பக்தியால் உருகுவதே பூசையில் பக்தி எனப்படுகிறது.
4.நினைப்பதில் பக்தி
இறைவனை எந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டே இருப்பது.எந்த வேலைகள் செய்தாலும் இறைவனை நினைப்பதில் தடை ஏதும் இல்லாது மனமெல்லாம் நிறைந்து பரம் பொருளை மனதில் சுமப்பதில் சுகம் காணுவதே நினைப்பதில் பக்தி எனப்படுகிறது.
5.சேவையில் பக்தி
இறைவன் புகழ் பரப்புவது.இறைவனின் கதைகளை கூறுவது.பகவானின் பாடல்களை பாடுவது போன்ற செயல்களை செய்து அவன் புகழ் பரவும் சேவையில் தன்னை அர்ப்பணிப்பதே பகவத் சேவையில் பக்தி எனப்படுகிறது.
6.தோழமை பக்தி
இறைவனை நண்பனாக நினைத்து தனக்கு ஏற்படும் நன்மை,தீமைகளை பகவானிடம் கூறி பகிர்ந்து கொள்வது.தோழனாக கருதுவதில் பக்தி எனப்படுகிறது.
7.சேய்பக்தி
இறைவனை தனக்குப் பிறந்த மகன்போல் பாவித்து தாலாட்டி, அமுதூட்டி மனம் உருகி மகனே/ என பெயர் சொல்லி அழைத்து வழிபடும் பக்திக்கு ……மகனாக கருதுவதால் சேய் பக்தி எனப்படுகிறது.
8.பதி பக்தி
இறைவனை தன் கணவனாக கருதி பக்தி செலுத்தும் பக்திக்கு நாயகனாக நேசிக்கும் பக்தி எனப்படுகிறது.
ஆண்டாளின் பக்தி பதிபக்தி ஆகும்.
9.சமர்ப்பிக்கும் பக்தி
இறைவனுக்கு என்ன செய்தாலும் நைவேத்யம் செய்த பின் உண்பது.அப்படிச் செய்யும் போது இறைவன் உண்பது போன்ற திருப்தியை பெற்ற மன நிறைவுடன் உண்பதே நைவேத்யம் சமர்ப்பிக்கும் பக்தி எனப்படுகிறது.
10.பாவனை பக்தி
இறைவனை மனதிலும்,சிந்தையிலும் நிறுத்தி மனதை இறைவன் பால் ஒருமுகப்படுத்தி தியானம் செய்து வணங்கும் முறையே பாவனை பண்ணி பக்தி செலுத்தும் முறையாகும்.
11.பிரிதல் பக்தி
கோவிலில் இறைவனை தரிசித்து வரும்போதுஇறைவனைவிட்டு வரமுடியாமல் தவிக்கும் மன நிலையே பிரிதலின் பக்தி எனப்படுகிறது.
இறைவனை பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா ? பிரிய வேண்டி உள்ளதே என வருந்தி பிரிதல் பக்தி.
கீதையில் அர்ச்சுனனை பார்த்து கிருஷ்ணர் கூறுகிறார்.அர்ச்சுனா "என் பக்தனாகி விடு…..’ என்கிறார்.பக்தர் இடத்தில்தான் இறைவன் அன்பு செலுத்துகிறார். ஞான உபதேசம் செய்கிறார்.
அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் போர்க்களத்தில் உபதேசம் செய்ததால் நமக்கு கீதை கிடைத்து இருக்கிறது.கீதை இந்துக்களின் புனித நூல்.
மகாபாரதம் என்பது ரிக், யஜூர்,சாமம்,அதர்வனம் என்கின்ற நான்கு வேதங்களுக்கு அடுத்து ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகிறது கீதை.
இதை நூல் வடிவம் கொண்டு வர எண்ணியவர் வியாசர்.தாம் சொல்லச் சொல்ல யாரைக்கொண்டு எழுதச் சொல்வது என சிந்தித்தபோது பிரம்மன் மனதில் உதித்தார்.
பிரம்மனை நினைத்து வழிபட்டார்.பிரம்மரும் அவர் முன் தோன்றினார்.வியாசர் தம் எண்ணத்தை பிரம்மாவிடம் சொன்னார்."கணபதியை வேண்டிக்கொள்ள உங்கள் எண்ணம் ஈடேறத் துணை புரிவார்" எனக் கூறி மறைந்தார். வியாசரும் கணபதியை வேண்டினார்.கணபதியும் வியாசர் முன்பு தோன்றி அவர் எண்ணத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.அத்துடன் ஒரு நிபந்தனை விதித்தார்.
அவர் விதித்த நிபந்தனை "வியாசர் இடையே நிறுத்தாமல் காவியத்தை சொல்லி முடிக்கவேண்டும் "என்றார் வியாசரும் ஒப்புக்கொண்டார்.
அதன்பின் வியாசரும் ஒரு நிபந்தன விதித்தார் .”தாம் சொல்லுகின்ற பாடலின் கருத்தின் பொருளை உணர்ந்தபடியே எழுத வேண்டும்",என்றார்.
கணபதியும் "சம்மதம்" அளித்தார்.கணபதி மேருமலையில் அமர்ந்து தமது வலதுபுற தந்தத்தினை கொண்டு எழுத அமர்ந்தார்.
வியாசர் பாடலாகச் சொல்லச் சொல்ல கணபதி பொருளினை யோசித்து…….யோசித்து எழுதத் துவங்கினார்.
இதனால் கணபதி எழுதும் போது நேரங்கிடைத்ததால் விடாமல் வியாசரும் சிந்தித்த வண்ணம் தொடர்ந்து இடைவெளி விடாது சொல்லிக்கொண்டே இருந்தார்.
-கீதை தொடரும்.