ஆழ்கடலில் ஆழம் காண முடியாத ஞானக்கடல் பகவான் .அவரின் உபதேசங்களை உலகுக்கு எடுத்து சொல்ல வந்தவர் வியாசமுனிவர்.
உபதேசத்தை கேட்க செவிமடுத்த அர்சுனன் பகவானின் பக்தனாக மாறச் சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சம்சாரக் கடலில் நீந்தி வரும் ஜீவன்கள் பரமாத்மாவை அடையச் செய்வது தான் கீதையின் முக்கிய நோக்கமாகும்.
உலகின் கடமைகளை நாள்தோறும் ஆற்றிக் கொண்டு பரமாத்மாவை அடைய முடியும் என்ற தத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் அற்புதமான உத்தியை கீதை புகட்டுகிறது,
1.ஞான நிஷ்டை (சாங்க்கிய யோகம்)
2. யோக நிஷ்டை (கர்ம யோகம்) பிற சாஸ்திரங்களில் பகவானை அடைவதற்கு .
- கர்மம்
- உபாசனை
- ஞானம் என்ற மூன்று வழிகள் சொல்லப்படுகிறது.
1. பகவானும், தானும் வேறல்ல ஒன்றே என்ற பாவனையுடன் செய்யும் உபாசனை ஞான நிஷ்டையில் அடங்கும்.
2. பகவானைத் தமக்கு வேறாக எண்ணி கர்ம மார்க்கத்தில் ஈடுபடுகிறபோது அது யோக நிஷ்டையில் அடங்கும்.
கீதையில் பக்திக்கு மிக உயர்ந்தநிலை கொடுக்கப்பட்டு உள்ளது.அதனால் தான் பகவான் பல இடங்களில் அர்சுனனை பக்தனாக ஆகிவிடுமாறு ஆணையிடுகிறார்.
பக்தி யோக நிஷ்டையில் அடங்கும் தங்கள் கடமைகளுக்கிடையில் பஜனை,பூஜை தியானம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்தாலும் பகவானை அடைந்து விடலாம் என்பதற்காகவே பக்தனாக இருக்கச் சொல்கிறார்.
பகவானை எல்லோரும் அடைய வேண்டும் என்பதற்காகவே எளிய முறைகளான வணங்குவது ,பூஜைசெய்வது ,தியானம் செய்வது என சுலபமான வழியைகாட்டி இருப்பது பகவானின் திருவருளாகும்.
நித்ய கடைமைகளை நாள்தோறும் செய்ய வேண்டும் என்பதை இரு நிலைகளிலும் கூறி இருக்கிறார்.எனவே தான் அர்சுனனை “யோக நிஷ்டையில் நிலை பெற்று கர்மங்களைச் செய்” என்று ஆணையிடுகிறார்.
‘ஞானம்’ என்ற சொல்லுக்கு ஞானயோகம் என்றாலும் அதன் பயனாக விளைவது தத்வ ஞானமாகும்.
ஞான நிஷ்டைக் கும் யோக நிஷ்டைக்கும்உள்ள பயனே தத்வ ஞானமாகும் .இதை அடைவதே பக்தியின் உச்சமாகும்.
கர்ம யோக சாதனை புரிந்து பிறகு ஞான நிஷ்டையின் மூலம் சத்,சித்,ஆனந்தமயமான பரமாத்மாவை அடையும் வழிகள் கூறப்பட்டுள்ளன.
ஞான நிஷ்டைக் கும் யோக நிஷ்டைக்கும்உள்ள பயனே தத்வ ஞானமாகும் .இதை அடைவதே பக்தியின் உச்சமாகும்.
கர்ம யோக சாதனை புரிந்து பிறகு ஞான நிஷ்டையின் மூலம் சத்,சித்,ஆனந்தமயமான பரமாத்மாவை அடையும் வழிகள் கூறப்பட்டுள்ளன.
1.தகாத செயல்கள் ஆன திருட்டு,விபசாரம்,பொய், கபடம்,சூது,பலாத்காரம்,பிறரை துன்பப் படுத்துவது ,தகாத உணவை உண்பதுமுதலியன சாஸ்திரங்களில் தடுக்கப்பட்டு உள்ள கீழான செயல்கள் ஆகும்.இவ்விழிந்த செயல்களை மனம், சொல், உடலினால் செய்யாமல் இருக்க வேண்டும் .இதுவே முதல் தியாகமாகும்.
2.காம்ய கர்மங்கள் என்பது மனைவி ,மக்கள்,செல்வம் இவற்றை அடைவதற்காகவும் நோய்கள் நீங்குவதற்காகவும் ,செய்யப்படும் யாகம், தானம், தவம் போன்றவை காம்ய கர்மங்கள் ஆகும்.இவற்றை தன்னலம் கருதிச் செய்யாமல் இருக்கவேண்டும்.இதுவே இரண்டாவது நிலையிலுள்ள தியாகமாகும்.
3.முற்றும் துறத்தல் என்பது மனைவி, மக்கள் ,செல்வம்,புகழ்,தற்பெருமை இவைகள் பகவானை அடைவதற்கு தடையாக உள்ளது என உணர்ந்து அவற்றை துறக்க வேண்டும்.இதுவே மூன்றாவது நிலையிலுள்ள தியாகமாகும்.
4.தன்னலம் கருதி பிறரை தொண்டு செய்யத் தூண்டுதல் கூடாது, என்பது தன்னுடைய சுகத்திற்காக பிறரிடம் செல்வத்தையோ,ஊழியத் தையோ எதிர்பார்ப்பது,பிறர் கொடுக்கும் போது வாங்கிக் கொள்வது ,நமது தேவைகளை பிறரைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வது, இவற்றை அறவே ஒழித்தல் தியாகத்தின் நான்காவது நிலையாகும்.
(கீதை தொடரும்)