தட்சப் பிரசாபதியின் புதல்விகள் கத்ரு ,விநதை.காசியப முனிவரை மணம் செய்தனர் ஒரு நாள் உங்களுக்கு என்ன வரவேண்டும் என கேளுங்கள் என்றார் காசியப முனிவர்.பழம் பொருந்திய ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்றாள் கத்ரு.ஆற்றல் மிகுந்த இரண்டு பிள்ளைகள் போதும் என்றாள் விநதை.விரும்பிய வரத்தை வழங்கினார் காசியப முனிவர் உரிய நேரத்தில் இருவரும் கருவுற்றார்கள்.முட்டைகளை பிரசவித்தாள் கத்ரு .அதில் இருந்து ஆயிரம் பாம்புகள் பிறந்தன.விநதை இரண்டு முட்டைகளை பிரசவித்தாள். பாம்பு குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு முட்டையை உடைத்து விட்டாள் விநதை.மேல் பாதி உடல்வுடனும் கீழ் பாதி உடல் இல்லாமல் இருந்தான் மூத்த மகன். அவன் சூரிய பகவானின் தேரை செலுத்தும் சேவையை செய்து வருகிறான்.அடுத்த முட்டையிலிருந்து ஒரு பறவை பிறந்தது. பிறந்த சில நாட்களில் பறந்து செல்லும் ஆற்றலுடன், பலவித விந்தைகளை கற்று சிறப்பானவனாக வளர்ந்தான்.ஒரு நாள் சகோதரிகள் இருவரும் வனப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர்.வெள்ளைக் குதிரையை கண்டனர் இக்குதிரை என்ன…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
அகவை முதிர்ந்த அனுபவம் முதிர்வு புன்னகையுடன் அனுசரிக்கும் அன்பு முதிர்வு மகன் மகள் படிப்பு முடித்து தொழில் திருமணம் பேரன் பேத்தி அகம் மகிழ்ந்து வாழும் முதிர்வு அக்கம் பக்கம் நேசம் வளர்த்து அகத்தடிமை பட்டு இறை தொண்டாற்றி உவகை கொண்டு வாழும் முதிர்வு. வாழ்ந்து அனுபவித்த பாடப் புத்தகம் நான்கு ஐந்து தலைமுறை கண்டு வீழ்தல் அகற்றி வீருகொண்டு எழுதல் கற்பிக்கும் அனுபவ கல்வி அறிவு மாழ்குதல் இன்றி செயல் படும் நெம்பு கோல் தூண்டும் மணிவிளக்கு சூழ் விளக்க ஆய்வு அறிவு பெற்ற பெட்டக களஞ்சியம் முதிர்வு. விருப்பு வெறுப்பு களைஅகற்றி இன்பம் துன்பம் கடந்து வந்து திருப்பம் பல கண்டு வாழ்ந்து திசைகள் எட்டும் சுழன்று இயங்கி இரும்பு போல் அடி வாங்கி பக்குவப் பட்டு பகுத்து உணர்ந்து கரும்பு அடிப் பகுதி ஆகி பிறர் வாழ வழிகாட்டும் முதுமை.
வரவு அறிந்து செலவு செய்து வகுத்து நல்ல திட்டம் தீட்டி மரம் போல் உதவ எண்ணி மாநிலத்திற்கு பயன் சேர்க்க வேண்டும் கரம் இருப்பது கொடுத்து மகிழ காரணம் அறிந்து உதவி உயர்க தரம் பார்க்காது தகுதிவளர்த்து தரணியில் செழித்து வையத்தில் வாழ். நான்கு பங்காய் பிரித்தல் வேண்டும் சாப்பிட கொடுக்க தேவை பிற்காலம் வான்மழை பருவகாலம்பிரித்து புவிவாழ திட்டமிட்டு கொடுக்கும் கொடை தான் தனது பிறர் பிற்காலம் பிரித்து செலவு செய்தால் உழைப்பு மான்மகன் படைத்த படைப்பு பயன் அறிந்து செலவு செய்தால் உயர்வு .தேவை அறிந்து வாங்கவேண்டும் கண்டதை வாங்கி சிறமப் படாது நாவை அடக்கி ஆளப் பழகினால் ஆரோக்கிய வாழ்வு வசப்படுவது போல் சேவை செய்யும் பழக்கம் வந்தால் மகிழ்ச்சி நம் வசம் இருக்கும் ஔவை சொன்ன அமுத மொழியாய் காலம் கடந்தும் வரலாறு ஆகும்.
சிறுசிறு மழைத்துளி சேர்ந்தால் அணைநீரையும் சிறுக சிறுக சேமித்தால் வாழ்வுசிறக்கும் எறும்பின் சேமிப்பு மழைக் காலத்திற்கு மனிதனின் சேமிப்பு எதிர் காலத்திற்கு வறுமை இல்லா வாழ்வு பெற வாழ்க்கைக்கு அவசியம் சிக்கன சேமிப்பு சிறுவயதில் இருந்தே பழக வேண்டும் சிறுகச் சிறுக சேமிக்க வேண்டும் .உண்டியலில் ஒவ்வொரு காசாய் போட்டு பண்டிகை காலத்தில் கொடுப்பதை போட்டுஉண்டி சுருக்கி சேர்த்துவைத்து உறவு வளர்க்க செலவு செய்து வண்டி மாடு போல் பொதிசுமக்க வாழும் காலம் அர்த்த மாகும் சண்டி மாடாய் குணம் இருந்தாலும் சமாளிக்க உதவுவது சேர்த்த பணம். வயதில் சேமிக்க பழகிக் கொண்டால் வறுமை வெளியே ஓடிப் போகும் அயர்வு ஏற்படும் முதுமை நிலையில் ஆதரவாய் இருக்கும் சேமிப்பு பணம் உயர்வு கொடுக்கும் உழைப்பின் பயன் உவகை கொண்டு வாழ வைக்கும் துயரம் என்பது தூரம் போகும் சேமிப்பு இருப்பாய் இருந்து விட்டால்.
இரு மனம் இணைவது திருமணம் இது இல்லத்தின் பந்தம் திருமணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும் இல்ல அறம் வரும்உறவை இன்முகத்துடன் உபசரித்து மங்கல நாண் அணியும் திருமணம் திருமதி அருந்ததி பார்க்கும் திருமணம் அர்ச்சதை தூவிஆசி வழங்கும் திருமணம் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒரு மனமாகும் உறவு பந்தம் கங்கணம் கட்டி காலமெல்லாம் காப்பாற்ற உறுதி எடுக்கும் மணப் பந்தம் பாங்குடனே பகுத்து குடும்பம் நடத்த கொள்கை வகுத்து செயல்படும் பந்தம் தாங்கும் தூண்போல் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் உணர்வு பந்தம்
படிக்காமல் வேலைசெய்து உயர் பவனுண்டு படித்த படிப்புக்கு வேலைதேடி அலைபவனுண்டு குடிஉயர கொள்கையுடன் வேலை செய்பவனுண்டு குடித்துவிட்டு வம்பு பேசி வீதியில் விழுபவனுண்டு தடிபிடித்து சமூக நெறிமுறை காப்பவனுண்டு தடியால் அடிவாங்கி சிறையில் அடைபட்டவனுண்டு மடிக்கணினி பயன்படுத்தி உயர்பவனுண்டு மல்லுக்கட்டி மண்டை உடைத்துக் கொள்பவனுண்டு. கடைக் வைத்துப் பிழைப்பவன் உண்டு கண்ணியம் மறந்து சுற்றுப்பவன் உண்டு வடை விற்று வாழ்பவன் உண்டு சோம்பி முடங்கி கிடப்பவன் உண்டு தடை தாண்டி பிழைப்பவன் உண்டு தடிமாடாய் தண்டச்சோறு தின்பவன் உண்டு குடைவிற்று செருப்பு தைப்பவன் உண்டு கடன்பட்டு உயிரை மாய்பவன் உண்டு. கல்சுமந்து மண்சுமந்து வாழ்பவர் உண்டு கடினமான வேலையென தட்டிக்கழிப்பவன் உண்டு நல்லகருத்து ஏற்றுசிலை வடிப்பவர் உண்டு எதிர்த்து ஏளனம் செய்யும் எத்தருமுண்டு சொல்நயத்துடன் பேசி உயர்பவர் உண்டு மரவேலை சாமான் செய்பவர் உண்டு இல்லையென்று சொல்லாது செய்பவர் உண்டு இருப்பதைக் கொடுக்க மனமில்லா மனிதருண்டு.
தவழ்ந்து எழுந்து ஓடி விளையாடி இன்புற்று இருக்கும் இனிய பருவம் தவறு என்று தெரியாமல் செய்து தடைகளைத் தாண்டும் குறும்பு பருவம் உவகை கொண்டு அன்பு செலுத்தி உறவு விரிய பாசம் காட்டி கவரும் கண்ணன் நேசப் பருவம் விரும்பி குறும்பு ரசிக்கும் பருவம். படிப்பு பாட்டு நடிப்பு என நளினமாய் நடமாடி விளையாடி மகிழ்ந்து அடி வாங்கி அடம் பிடித்து பார்த்ததே வாங்கி பிடித்து சேர்த்து துடிப்புடன் துருதுருப்பாய் துள்ளும் பருவம் பாம்பையும் பிடிக்கும் பயமறியா பருவம் மடி. மெத்தையாக்கி கதை கேட்டு கேள்வி கேட்டு துளைக்கும் பருவம். துணிவு கொண்டு ஏறி இறங்கி துச்சமாய் எதையும் செய்யும் பருவம் ஆணித்தரம் இல்லா ஆசைப் பருவம் செய்வதை செய்யும் கிளி பிள்ளையாய் ஆணி வேராய் பதியும் பருவம் இன்னல் அறியா உள்ளம் கொண்டு பணிவு காட்டி நேசம் கொள்ளும் கள்ளம் இல்லா பிள்ளைப் பருவம்.
படிப் படியாய் உயர்த்துவது ஏணி வகுப்பு வகுப்பாய் உயர்த்துவது கல்விகடிதல் கொண்டு ஆசிரியர் தண்டித்தாலும் மாணவரை உயர்த்தும் உயர்ந்த எண்ணத்தால் விடிதல் கொடுக்கும் விடிவெள்ளி கல்வி ஒளி விளக்காய் சுடர்வது கல்வி கொடி பூவாய் மணம் வீசுவது அறிவு என்ற மூன்று எழுத்தால் கல்வி கடல் போல் நீண்டது கல்லூரி படிப்பு முடிந்தும் தொடரும் நல்லதை செய்ய தூண்டும் தூண்டுகோல் அல்லவை விளக்கச் செய்யும் காரணி வல்லவனாய் வையத்தில் உயர வைக்கும் வாக்கு. வாதம் தவிர்க்க செய்யும் வெல்லும் ஆற்றல் தருவது கல்வி மூர்க்க குணம் விலகிச் செல்லும் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரையும் சாதிக்க வைப்பது கல்வி போதி மர புத்தர் போல் போதனை தருவது படித்த கல்வி ஓதி உணர்ந்து செயல் பட்டால் ஓய்வு அறியாமல் இயங்க வைக்கும் மதி அறிவால் வெல்லும் இடத்தில் மதிப்புடன் வாழ வைப்பது படிப்பு.
தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி ஏட்டை தந்த தடாகமே வாழி அய்யம் அகற்றும் ஈரடியே வாழி அறம் வகுத்த அடியே வாழி உலகப் பொது மறையாய் சுற்றிவந்தாய் ஒரு இடத்தில் தங்கி விட்டாய் உலகில் உயர்ந்த சிலையாக எழுந்து கன்னியா குமரிக் கடலில் நிற்கின்றாய் கலந்த சந்தன மனமாய் பரவி காலம் பல கடந்தும் நிற்கிறாய் வலம் வரும் வசந்தம் போல் வாழ்வு செழிக்க வந்த குறளே! சங்கத் தமிழ் நீ வளர்த்தாய் கடல் சங்கமத்தில் அமைதி கண்டாய் பொங்கும் கடல் அலை கூட தொட்டு தொட்டு சென்று ஓட சங்கு கொண்டு ஊதிய தமிழ் முக்கடல் கூடும் சங்கமத்தில் ஒலித்து பொங்கு தமிழ் பொழிவுடன் எழுந்து முப்பால் புகட்டி புத்துயிர் பெற்றாள்.
ஆண்பெண் பந்தபாச உறவு நீ ! ஆண்டவன் படைத்த கரு நீ !விண் மழையும் பொழிவது தெரியாது? மண்ணில் நீ வருவதும் தெரியாது? கண் இமைக்கும் நேரத்தில் பிறப்பாய் காலம் நேரம் சொன்னாலும் மாறும் பெண் முழுமை அடைவது உன்னால் தாய்மை தந்த சிசு நீ! பத்து மாத பந்தம் நீ! உந்திக் கொடி உறவு நீ! சொத்தாய் வந்த சொர்க்கம் நீ ! துடித்து உறவாடும் உறவு நீ !முத்தாய் வளரும் முழு நிலவு நீ ! முகம் தெரியாத பாசம் நீ! பித்தா இருக்கும் துடிப்பு நீ! பேதை அறியும் புதுஉறவு நீ! இரத்த உறவு பந்தம் நீ! சுகம் தரும் சுகந்தம் நீ! வரவாய் வரும் வாழ்வு நீ! வாழும் வாழ்வின் அர்த்தம் நீ !திரவியமாய் வந்த பொன் நீ! திடத்தை கொடுக்கும் குழந்தை நீ !வரமாய் வந்த வரவு நீ! வளம் கொடுக்கும் வசந்தம் நீ.