Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

சித்திரை மாத நிலவினிலே வான் என்னை எழுதத் தூண்டியது நிலவு புத்தியைத் தீட்டிப் பார்த்தபோது விண்ணில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது அத்தம் ஒளி கண்ட போது முழு மதி தவழ்ந்து வந்தது முத்திரை பதித்த முழு ஒளியில் மேகம் மறைத்து மறைத்து விளையாடி. மீனாட்சி சுந்தரேசர் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு அணிந்து வானவர் வெண்சங்கு ஊதி வந்து அரியம் சிவனையும் கண்டு வணங்க ஆனந்தனை மக்களும் காணும் கூட்டம் வைகை ஆற்றில் வெள்ளமாய் பெருக கானல் வெப்பமும் மனமும் கலந்து பக்தி மனம் விண்ணைத் தொட…. சிவந்த சூரியன் மேகத்தில் மறைந்தான் தன் வெப்பத்தை மறைத்துக் கொள்ள குவலயம் குளிர்ச்சி கொடுக்க நிலா தன் முழுமையும் வெளியில் காட்ட கைவளம் கூட கோளம் முழுமையும் வெண்மை பரவிய நிலவு வெளிச்சம் சவரி சிலிர்க்க மனம் மகிழ மீனாட்சி கல்யாண சித்திரை திருவிழா

Read More

காவேரி நடந்து வந்தால் சோலை பாய்ந்து வந்தால் பசுமை புரட்சி நாடித் துடிப்பாய் பாயும் போது நாடு செழிக்கும் நன்மை பெருகும் ஓடும் தண்ணீரில் ஓடையில் குளிர்ந்து பாயும் தண்ணீரில் பயிர்கள் வளரும் காடும் கலமும் நிறையும் களஞ்சியது தானியம் ஆண்டுக்கு வந்து வரவாகும். ஓடிவரும் பாதை எங்கும் பசுமை செடியும் கொடியும் மரமும் மகசூழும் பாடிவரும் பறவை உண்டு உறவாடி மரத்தில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் நாடிவரும் வண்டின் ரிங்கார சங்கீதம் மரகத சேர்க்கை செய்து மகிழும் வாடி விடாமல் விவசாயி பார்த்து நீர் பாய்ச்சி அறுவடை செய்வர்கோடி நன்மை கிடைக்கும் நீர்வரத்தால் இயற்கை உலகுக்குக் கொடுத்த வரம் நாடி வரும் விவசாயி நலமுற்றால் நானில்லமே சிறக்கும் உணவு வரத்தால்….மூடி போட்டு அடைத்து வைக்க தானியம் அல்ல! தண்ணீர் தேங்காமல் பாடி ஓடிப் பாய்ந்து தமிழ் மண்ணில் நடந்தாய் வாழி காவேரி.

Read More

பூதம் தந்த பொற்காசுஒரு இளைஞன் காட்டு வழியாக சென்றான்.அவன் எதிரில் பூதம் ஒன்று வந்தது. பயந்தான் இளைஞன்.மனிதா! உன் வீட்டில் ஏழு கலையத்தில் தங்கம் வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள் என்றது பூதம்.வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான் இளைஞன்.ஆறு கலயத்தில் முழுவதும் தங்கம் ஒரு கலயத்தில் பாதி தங்கம் இருந்தது.மனம் திருப்தி படாத இளைஞன் .செலவு செய்யும் மனம் இல்லாமல், ஆசைப்பட்டான் கலயத்தை நிறப்ப. தன்னிடம் மனைவியிடம் குழந்தையிடம் உள்ள நகைகளை எல்லாம் கலட்டி கலசத்தில் போட்டுப் பார்த்தான் நிறைய வில்லை.உழைத்து தங்கம் வாங்கி போட்டான். நிறைய வில்லை.ஒழுங்காக சாப்பிடாமல், கலசம் நிறைய வில்லை என்ற மன வருத்தத்தில் நோய்வாய்ப்பட்டான்.பூதத்தை மனதில் நினைத்து இப்படி ஆகிவிட்டேனே என வருந்தினான்.அவன் முன் பூதம் தோன்றியது.கொடுத்த பொற்காசுகளை நீயும் உண்டு. பிறருக்கும் கொடுத்திருந்தால் அது பெருகி இருக்கும்.உன் பேராசையால் உன்னிடம் இருந்தும் யாருக்கும் உதவாமல் போனது என்றது பூதம்.பேராசை இல்லாத மனிதனிடம் கொடுக்க கலசத்தை எடுத்துக்…

Read More

சோதனை பல தாங்கி போராடி சேவகம் மக்களுக்கு என்று எண்ணி வேதனை சூழ்ந்த போதும் சுழன்று வெல்வது உறுதி! காப்பது அமைதியென போதனை செய்து அகிம்சை வழியில் போராடி சிறை சென்று வாடி சாதனை படைத்த சரித்திர காந்தியே சாதித்தது சாந்தமே உண்மை வழியே! போர்பந்தர் ஊரில் பிறந்ததால் தானோ! போர் செய்த எதிரியை வென்றீர்தார் போடாத சாலை எல்லாம் நடந்தே சென்ற நடைபயணம் எல்லாம் வேர்போல் ஆழமாய் வேரூன்றியதால் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் கார்மேக கண்ணீர்! சுதந்திர தாகம் அணலாய் எரிந்த வேள்வி சிறை!துப்பாக்கி குண்டு பீரங்கி குண்டு தூரப் போனது அகிம்சை குண்டால் உப்பு சத்தியா கிரகம் செய்து அன்னியப் பொருள் எரித்து எதிர்த்து சட்டப் படிப்பு படித்த காந்தி சகல வேலையும் தானே செய்தார்சட்டை போடாத எளிய காந்தி மாணிக்கமாய் ஒளிந்த மனிதர் காந்தி.

Read More

காடு மலை தாண்டி வந்த மூலிகை தண்ணீர் பச்சிலை மண்மருந்துபாடுபட்டு உழைத்து உண்டு உறங்கி இயற்கையுடன் இணைந்து வாழும் போது நாடு போற்றும் சித்த மருத்துவம் அகமும் புறமும் சுத்தம் செய்து கேடு வராமல் நோயி இல்லாமல் வாழ்ந்தனர் பல ஆண்டுகள் சுகமாக. இயற்கை உரம் பசுமையான காய் பழம் வீட்டுத் தோட்ட உழைப்பில் வியர்வை சிந்தி மன மகிழ்ச்சியில் நோய் தூரப் போய் நிற்கும் பயறு வேகவைத்து கடலைக் கிழங்குகள் இஞ்சி மல்லி சர்க்கரை பித்தநிவாரணிஇயல்பு நல்லதாய் அமைத்து வாழ்ந்தால் இன்பத்துடன் இளமை மாறாது வாழலாம். மாங்காய் இலந்தப்பழம் மசக்கைக்கு நல்லது இட்லி பொங்கல் சீரணத்துக்கு நல்லது தேங்காய் வாழை தேன் வெற்றிலை வாதம் பித்தம் கபம் போக்கி வாங்கும் பொருள் ஆரோக்கியம் தர சமைத்து உண்டு சுகாதாரம் பெறுவோம் திங்கள் எண்ணெய் குளியல் சூடு தணிய வில்வம் துளசி வேப்பிலை வலிமைக்கு.

Read More

உன்னால் முடியும் என்று நினைத்துவிடு உண்மைப் பொருளை எடுத்துச் செல்லு உலகம் உன்னை பழித்தாலும் துணிந்து உரமாய் போட்டு எடுத்துச் செல்லு .உழைப்பு உன்னுடன் இருந்து விட்டால் உயர்வை யாரும் தடுக்க மாட்டார் உறுதி உன்னுடன் இருந்து விட்டால் ஊனம் கூட தடை இல்லை. சிறிய செயலை எடுத்துக் கொள் சிரத்தை உடனே செய்து முடி பெரிய பெரிய செயல் செய்ய பெரிதும் துணையாய் நின்று விடும். கடுகு என்று யாரையும் ஒதுக்காதே கடுமைச் சொல் பேசி கொள்ளாதே சிறுமை என்று செயலை தள்ளாதே சிதைவு கண்டு மனம் தளராதே. ஊக்கம் உன்னை உயர்த்தி விடும் ஆக்கம் கொண்டு உழைத்து விடு தாக்கம் என்பது தள்ளிப் போகும் தேக்கம் என்பது தேய்ந்து போகும். முடியும்.. முடியும்… முடியும் என்றால் முனைப்பு உன்னிடம் வந்து விடும் மலையும் நகர்த்தும் துணிவு வரும் மலைக்க வேண்டாம் செயல் படு.

Read More

தூண்டிவிடும் சுடர் விளக்கு போல் தூண்டு கோல் வேண்டும் வாழ்வில் ஆலோசனை சொல்வது எளிது தான் அதன் வழி நடப்பது அரிது. நா… காக்க நலம் கூடும் நாவன்மை கூடமனம் காக்க வேண்டும்நல்லவை வசம் வர வேண்டின் நன்றி மறவாமை என்றும் வேண்டும். சிக்கனம் சிறுவயதில் வரும் போது சேமிப்பு பெரிய வயதில் உதவும் மனம் போதும் என்று நினைத்தால் மனம் பாரம் இல்லாமல் போகும். சேற்றில் முளைத்த தாமரை பூஜைக்கு சேரியில் பிறந்தாலும் கல்வி உயர்த்தும் புறமுதுகு காட்டாத மன்னன் போல் புறம் சொல்லாது நிற்பது வீரம். கொடிய நஞ்சு இரக்கமில்லா மனம் கொடிய பாம்பு கொத்தாது வணங்க அன்பான நேசிப்பு அகிலம் வெல்லும் ஆதரவு கரமாய் நிலைக்கும் நட்பு. உலகம் சுழல்வது போல் வாழ்வும் உருண்டையாய் சுழல்வது இயற்கை என்றால் துன்பம் கண்டு அச்சம் வேண்டாம் துன்பச் சுழற்சியில் இன்பம் வரவு.

Read More

பந்து போன்ற உலக உருண்டை பறந்து போவது முடியும் ஒன்றா பாசம் வைத்து உலக மக்கள் நேசம் கொண்டால் முடியும் தானே! நாணயத்தின் இரு பக்கம் போன்று நாளும் மாறும் இரவு பகல் தேசம் விட்டு தேசம் போனால் இணைய வைப்பது நாட்டுப் பண்பு. காசு பணம் தேடித் தானே காத தூரம் பயணம் செய்கிறர் உறவு பிரிந்து உள்ளம் நெகிழ்ந்து தேசம் பிரிந்து போன போதும். நாடு விட்டு வந்த மக்கள் பாடு பட்டு உழைக்கும் போது நேசம் கொண்டு உறவு கொண்டு பாசம் கொள்வது நட்புக் கூட்டணிசாதி இல்லை மொழி இல்லை சமத்துவ மொழி இந்திய மொழி இந்தியன் என்ற உணர்வு மொழி அன்னியப் படாமல் காக்கும் மொழி. உறவுப் பாலமாய் இணைக்கும் கரங்கள் உதவும் நேசம் உள்ளப் பாசம் நாடு விட்டு நாடு போனாலும் நாளும் வளர்வது நாட்டு நேசம்

Read More

அகவை முதிர்ந்த அனுபவம் முதிர்வு புன்னகையுடன் அனுசரிக்கும் அன்பு முதிர்வு மகன் மகள் படிப்பு முடித்து தொழில் திருமணம் பேரன் பேத்தி அகம் மகிழ்ந்து வாழும் முதிர்வு அக்கம் பக்கம் நேசம் வளர்த்துஅகம் அடக்கி இறைத் தொண்டாற்றி உவகை கொண்டு வாழும் முதிர்வு. வாழ்ந்து அனுபவித்த பாடப் புத்தகம் நான்கு ஐந்து தலைமுறை கண்டு வீழ்தல் அகற்றி வீருகொண்டு எழுதல் கற்பிக்கும் அனுபவக் கல்வி அறிவு மாழ்குதல் இன்றிசெயல் படும் நொம்பு கோல் தூண்டும் மணிவிளக்கு சூழ் விளக்க ஆய்வு அறிவு பெற்ற பெட்டக களஞ்சியம் முதிர்வு. விருப்பு வெறுப்பு களைஅகற்றி இன்பம் துன்பம் கடந்து வந்து திருப்பம் பல கண்டு வாழ்ந்து திசைகள் எட்டும் சுழன்று இயங்கி இரும்பு போல் அடி வாங்கி பக்குவப் பட்டு பகுத்து உணர்ந்து கரும்பு அடிப் பகுதி ஆகி பிறர் வாழ வழிகாட்டும் முதுமை.

Read More

ஊருக்கு வெளிப் புறத்தில் இருக்கும் ஒரு மலை நம் கண்ணுக்குத் தெரிகிறது. பார்க்கும்போது மிக அருகில் இருப்பது போன்ற காட்சி தெரிகிறது. மலையில் ஏறி இயற்கை காட்சி காணலாம் என சென்றால். செல்லச்…. செல்ல மலை வெகு தூரத்தில் இருப்பதை உணர முடிகிறது. கண்ணுக்குப் பக்கமாக தெரிந்த ஒரு காட்சி! உணர்விற்கு வெகு தூரத்தை உணர்த்துகின்றது. அது போல் தான்…. இறைவனாகிய உருவம் நம் கண் முன் காட்சி தந்தாலும், அவனை அடையும் மார்க்கம் தூரத்தில் இருக்கிறது. என்பதை நாம் உணர்ந்து அவனை அடையும் மார்க்கத்தை அறிய வேண்டும். அரசு பொருட்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு சற்று தள்ளிப் போகும் போது இரைச்சலான சத்தம் மட்டும் கேட்கிறது. அதன் உள்ளே போன பிறகு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான பொருள் கேட்டு வாங்கும் சத்தம் துல்லியமாக கேட்கிறது. தூரத்தில் ஒரே இரைச்சலாக கேட்ட சத்தம் அருகில் கேட்கும் போது ஒவ்வொருவர் பேசுவதும்…

Read More