ஐந்தாம் படை வீடு
        திருத்தணி

              பல்லவி
சீற்றம் கொண்டு சூரனை வென்றாய் முருகா
சீற்றம் தணிந்து திருத்தணி வந்தாய் முருகா                        (சீற்ற)

         அனுப்பல்லவி

தேனும் தினையும்  உண்டு மகிழ
வள்ளியை  மணம் புரிந்து மகிழ                            (சீற்ற)

                சரணம்

மானின் வயிற்றுப் பிள்ளை வள்ளி
வேடவர் வளர்ப்பு பிள்ளை வள்ளி
தினைப் புறம் காக்கும் வள்ளியை
திருமணம் புரிய வந்த முருகா                        (சீற்ற)

                சரணம்

யானை வடிவம் கொண்ட கணேசன்
ஏதும் தெரியாமல் பயந்த வள்ளியை
சூது செய்து சூழ்ந்து கொண்டு
வயது முதிர்ந்த கிழவனே முருகா                          (சீற்ற)

Share.

Leave A Reply