தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம்.

ஆன்மா அறநெறியில்
அனுபவிக்க முடியாத
சில இன்பங்களை
அருள் நெறியில்
அனுபவிக்க முடியும்.

முருகக் கடவுள்
திருவடியை எப்போதும்
சிந்தித்திருக்க அந்த
நினைவில் பெற்ற
ஞானத்தால் பிறவித்
துன்பத்தைப்
பொடியாக்கும்.

மூளையின் பக்குவத்திற்கு
ஏற்ப எண்ணங்கள் உருவாகும்.
உள்ள இருளைப் போக்கும்
முருகன் நமது குரு…
குருநாதனை எண்ணி உருக
மூளை விரைந்து பக்குவப்படும்.

மாகன்கள் ஒன்றிலும்
கருத்து வையாது
சும்மா இருப்பவர்கள்
உலக மக்கள்
சுமைகளை இறக்கி
வைப்பவர்கள்
“சும்மாவிரு”
முருகனின் உபதேசம்.

முருகனின் அருளன்றி
எதையும் அறிய முடியாது.
நிற்பது, கேற்பது,
சிந்திப்பது, தெளிவது.
எல்லாமே முருகன்
அருள் தான்.

Share.

Leave A Reply