சித்தம் நிறைந்து சித்தனை தெளிந்து
சித்தி தரவே வந்தான்! புத்தம் புதுமலராய் பூக்களாய் பிறந்து
பூசைக்கு தான் வந்தான்!
குத்தம் செய்தால் கூட மன்னித்து
மறுவாழ்வு தரவே வந்தான்!
யுத்தம் செய்த போதும் வாழ்த்தியே
அருளைத் தந்தான் முருகன்.