சங்கு சக்கரக் கரத்தான் மருமகனே!
     சரண் அடைந்தவரை காப்பவனே!
குங்குமம் வைக்கும் பார்வதி மகனே!
    குலமகள் குங்குமம் காத்தவனே!
சங்கரன் கேட்க குருவாக அமர்ந்து!
      உபதேசம் செய்த முருகா!
சங்கொலி கேட்டு சண்டை இட்டாலும்!
       மன்னித்து விட்ட குமரா!

Share.

Leave A Reply