பன்னிரு கரத்தால் பாமரன் காக்க
   குன்றில் எழுந்தான்  குமரன்
துன்பம் போக்கி துயரம் நீக்கி
    தூயவன் அருளைக் கொடுத்தான்
ஈன்றவன் போல் காக்கும் கடமையை
    முருகன் ஏற்றுக் கொண்டான்
தன்னை உணர்ந்து தடைகள் களைந்து
    வாழ வழியும் சொன்னான். 

Share.

Leave A Reply