தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம்.
தூய உள்ளத்தினால்
முருகனை மனதில்
தியானித்து பெறும்
ஆற்றல் தெய்வ
பக்தியாகும்.
குருவின் அருளால்
பெறக்கூடியது இரண்டு
கல்வி, ஞானம்
முருகனை பணிந்தால்
ஞானம் சித்தியாகும்.
துறவு என்பது
மனம்
சம்மந்தப்பட்டது
உலக மாயையில்
அழுந்திக் கிடப்பவர்க்கு
மனத்துறவு
வாய்ப்பதில்லை
முருகன் அழகன்
குமரன் இளமையாவன்
இயற்கையும் குன்றும்
முருகன் இருப்பிடம்
முருக பக்தியும்
இளமைப் பொலிவில்
முருக உபாசகன்
உலகத்திற்கே
ஊழியம்
செய்கிறவன்
ஆகிறான்.
முருகன் அருள்
இருந்தால் தான்
சீடன்…
தனது நெறியில்
நிற்க முடியும்.
உணவில் கட்டுப்பாடு
மேற்கொண்டவனுக்கு
மனக் கட்டுப்பாடு
தானே வரும்
விருப்பு எதிர்ப்பு
தாக்குவது இல்லை
படிக்க கல்வி
உழைக்க உறக்கம்
அருள வருவது
குருவின் ஞானம்.
ஆன்மிக உண்மைகளை
அறியும் நாட்டம்
அவர் அவர்க்கு
சிறு வயதிலேயே
வந்துவிட வேண்டும்.