மார்கழி மாதம் எட்டாம் நாள்

பிரம்மா

மரம் ஆனாலும் மக்கியம் பயன்பாட்டில்
மர வேலை செய்த பிரம்மா
கரம் இருப்பது பணி செய்யவென்று
கல் கோவில் செய்த பிரம்மா
தரம் பார்த்து பொன் வேலைசெய்தும்
கலி அமர்ந்ததால் பழி வந்தது
வரம் தரும் நாயகனே பிரம்மா
நல்ல அருள் தந்து மக்களுக்கு அருள்வாய்


விஷ்ணு

மண்ணை உண்டு உலகை காட்டினாய்
மண்ணை அளந்த வாமணக் கண்ணா வெண்ணெய் உண்டு மோரைக் குடித்தாய்
வெள்ளை மனம் கொண்ட கிருஷ்ணா திண்ண மனத்துடன் அசுரரை அழித்தாய்
தின்பண்டம் உனக்குப் பிடித்த தீனி
வண்ண மாலை சூட்டி இருப்பாய்
வரதராசனே உன் தாழ் பணிகிறோம்


சிவன்

அண்டத்தில் தந்தையும் தாயும் ஆனவனே
அகிலத்தில் சேயாய் பிறந்து படைத்தவனே குண்டலினி சக்தி கொண்ட சிவனே
குமரனை நெற்றிக் கண்ணில் படைத்தாய் தண்டம் பிடித்த தணியாத பாலன்
கோபம் கொண்டு பழனியில் நின்றான் கண்ணியம் காத்து ஆசி வழங்கி
திருவிளையாடல் செய்தவனே எங்களையும் காப்பாய்

Share.

Leave A Reply