மார்கழி மாதம் ஏழாம் நாள்

பிரம்மா

அரும்பாகி மொட்டாகி மலர்பவனே பிரம்மா
அசையும் பொருள் யாவிலும் பிரம்மா சருகாகி மக்கி மண்வளமும் பிரம்மா
சாரதியின் உறவாய் பிறந்தவனே பிரம்மா இரும்பை எடுத்து கலப்பை படைத்து
இன்பம் தரும் உழவுத் தொழிலுக்கு
கருவியாகப் படைத்த நான்முகனே பிரம்மா
கருணை கொண்டு எங்களைக் காப்பாய்


விஷ்ணு

புல்லாங் குழலிசை கேட்ட பசுக்கள்
புத்துணர்வு பெற்று புதுப் பொழிவுடன் கல்லாய் இருந்து
காணஇசை கேட்டன
காக்கும் கடவுளே கேசவனே பெருமாளே துல்லியமாக கணக்கிட்டு துயர் துடைப்பவனே
துயரம் பறந்தோடும் புல்லாங் குழலிசையில் மெல்லிய புன்னகை சிரிப்பில் இந்த
புவனமே உன்
தாழ்பணியும் கண்ணா


சிவன்

சோதி லிங்கமே சொர்ண பளபளப்பே
செதுக்காத பனி கைலை நாதனை
பாதி உடலை பதிக்கு கொடுத்தவனே
பாம்பை மலையாய் கழுத்தில் அணிந்தவனே வாதிட்டு வடிவம் இலந்த பார்வதி
வரம் பெற்று மணம் புரிந்தாள்
ஆதியும் அந்தமும் ஆன சிவனே
அன்பென்ற ஆயுதத்தால் பணிகிறோம் அருள்வாய்

Share.

Leave A Reply