மார்கழி மாதம் 24 ஆம் நாள்

பிரம்மா

வெட்ட வெட்ட வளர்ந்தது மரம்
வேர் விட்டதன் பயன் அன்றோ
தட்டத் தட்ட பாறை குறைந்தது
உளி பட்டுசிலை ஆனது அன்றோ
கொட்ட கொட்ட வளர்ந்தது அறிவு
கணபதி முன் நெற்றியில் கொட்டியதால்
திட்டுத் திட்டாய் வளர்ந்தது மேகம்
சக்யலோகத்து பிரம்மனை காத்து அருள்வாய்

விஷ்ணு

கடல் அலை தாலாட்ட துயில்பவனே
கடைந்த பின்பு மோகினி ஆனவனே ஆடல் அழகனே விளையாட்டுப் பிள்ளையே
அசுரனை அழித்து வெற்றி கண்டவனே ஊடல் கொண்டு துளசியின் பெருமையை
உலகுக்கு எடுத்துச் சொன்ன கிருஷ்ணா கூடல் நகரில் கள்ளழகர் ஆனவனே
வைகை நதியில் பவனிவந்த அருள்வாய்

சிவன்

சிவசிவ என்றிட சிந்தையில் வருவாய்
சிவன் காலடி தொட அருள்வாய்
குவலயம் காப்பவனே நின்னருள் தருவாய்
குலம் குடி காத்து அருள்வாய்
சுவடு தடம் பற்றி வருகிறோம்
சுந்தரா மீனாட்சி சுந்தரேசா அருள்வாய் சிவந்த அடிதொழுது அன்பில் கரைந்து
சிவலோகம் காண்கிறோம் சிவனே அருள்வாய்

Share.

Leave A Reply