மார்கழி மாதம் 23ஆம் நாள்
பிரம்மா
படைப்பில் எல்லோரும் நல்லவரே பிறக்கும்
இடம் பொறுத்து மாறு பட்டர்
கடைந் தேறுதல் அவரவர் வசம்
கடமை செய்தல் அவரது பொறுப்பு
நடை தவறாது நல்ல நடத்தை
நலன்கள் தருமே தரணியில் வாழ
முடை வராமல் தடுத்து முழுநிலவாய்
வாழ வரம் தருவாய் பிரம்மா
விஷ்ணு
காடு சென்று மாடு மேய்த்ததால்
பாதம் சிவந்த கண்ணா உன்
பாடு பொருள் அறிந்து கொண்டேன்
உன் பாத கமலம் பற்றி ஈடு இணை இல்லை கண்ணா
இன்னிசை கேட்ட பின்பு வானில்
கோடு போன்ற பிறையைக் கண்டு
அதில் முகம் பார்த்தோம் அருள்வாய்
சிவன்
மண்ணால் பிடித்து வணங்கிய போதும்
மனதில் நிறைவாய் சிவனே சங்கரா கண்ணால் எரித்து சாம்பல் ஆக்கியும்
கணப் பொழுதில் உயிர் தந்தாய்
விண்ணில் உயர்ந்து சோதி ஒளியாகி
அடி முடி காணாமல் செய்தாய்
திண்ணமான மனம்தந்து கண்ணப்பனை காத்த
சிவனே எங்களையும் காத்து அருள்வாய்.