மார்கழி மாதம் 21 ஆம் நாள்

பிரம்மா

பிள்ளையிடம் தோற்பது போல் நடிக்கும்தாய்
வெற்றிப் பாதைக்கு வழி வகுப்பாள் கொள்ளை இன்பம் அடைந்தாய் முருகனிடம்
கொட்டுப் பட்ட போது பிரம்மா
பிள்ளை மனம் கோனாது அடைபட்டாய்
அன்பென்ற சிறையில் முருகனை உயர்த்த கொள்கை கொண்ட பிரம்மா உன்னருளால்
கொள்கையுடன் வாழ வாழ்த்தி அருள்வாய்

விஷ்ணு

கார் குழல் கண்ணா மணிவண்ணா
காலம் தாழ்த்தாமல் வந்து அருள்வாய்
பார் புகழும் கண்ணா மணிவண்ணா
பயம்போக்கி பக்குவப் படுத்தி அருள்வாய்
ஏர் உழும் கண்ணா பலராமா
ஏழ்மை போக்கி
வளம்தந்து அருள்வாய் தேர் ஓட்டிய கண்ணா மணிவண்ணா
சாரதியே பாதம் பற்றுகிறோம் அருள்வாய்

சிவன்

நெற்றிக் கண்ணுடைய ஈசனே நேசனே
நினைக்க நினைக்க ஆனந்தம் தருவாய் வெற்றிக் கனியை முருகனுக்குக் கொடுத்து தேவயானையை
மணம் முடித்து வைத்தாய் சுற்றி வந்த கணேசனுக்கு பழம்தந்து முழுமுதல் கடவுளாக்கிய ஈசா நேசா
பற்றிக் கொண்டோம் பரமன் பாதம்
பரமசிவனே நின்னருள் தருவாய் என்றும்

Share.

Leave A Reply