மார்கழி மாதம் 19 ஆம் நாள்
பிரம்மா
முட்டைக்குள் கருவாகி குஞ்சாகி வருவாய்
முத்திரை ஞானம் தந்தருளும் பிரம்மா கொட்டைக்குள் வித்தாகி மரமாகி வருவாய்
கொள்கை கொண்டு வாழ அருள்வாய் கோட்டை குடியெல்லாம் படைத்த பிரம்மா
கோவில் சிற்பமாய் இருப்பவனே பிரம்மா மொட்டைத் தலையில் முடிவளர்வது போல் மெய்யறிவு பெற்று வாழ அருள்வாய்
விஷ்ணு
தங்கம் பவளம் ஆபரணம் அணிந்து
தகதகக்கும் திருமாலே பக்தருக்கு என்றும் பொங்கும் வாழ்வு தந்து அருள்பவனே
பொருள் வேண்டி வருபவர்க்கு செல்வம் நீங்காத செழிப்பு தந்து அருள்பவனே
நின்னடி தேடி பாதம் பணிந்தால்
பாங்குடன் பரமபதம் தருவாய் திருமலை
பக்தரை என்றும் காப்பவனே அருள்வாய்
சிவன்
எத்தனை காலம் ஒற்றைக் காலில்
நடனம் ஆடினாய் சிவனே என்று கூத்தனைக் கூப்பிட்டு கேட்டால் தில்லை
அம்பல பத்தரைக் கேட்கச் சொன்னான் பித்தனைப் போல் பாடித் திரிந்த
சித்தரை கேட்க சிவன் பக்தன்
மத்தம் பிடித்து மனதில் பொற்சபை
தோன்றிய காலம் தொட்டாடி அருள்கிறான்