மார்கழி மாதம் 18ம் நாள்

பிரம்மா

அழகுத் திருமேனி கொண்டவனே பிரம்மா
அழகாய் உலகை படைத்த பிரம்மா
சுழலும் பூமியின் சுழற்சியில் என்றும்
சுழன்று கொண்டு இருப்பவனே பிரம்மா குழந்தை பிறப்பில் ஆச்சரியம் வைத்தாய்
பிறப்பும் இறப்பும் ரகசியமாய் வைத்தாய் நிழல் தருவாய் நாங்கள் வாழ
நித்தம் திருவடி பணிகிறோம் அருள்வாய்


விஷ்ணு

துளசி மாலை பசுமையும் நறுமணமும்
துவார நாசியில் படும்போது திருமாலை வளம் சேருமே உடலும் உள்ளமும்
பலம் கூடுமே பரந்தாமன் பாதம்பணிய அளவு இல்லா எண்ண அலையில்
அலைகடல் வாசா லட்சுமி நேசா
தளர்வு இல்லா மனதிடம் தருவாய்
திருமாலே உன்னைப் பாடி மகிழ

சிவன்

தூக்கிய காலில் நடனம் ஆடும்
தூயவனே வரம்தாராய் தில்லை அம்பலன் ஆக்கியோன் அகிலத்தை காப்பவனே கண்திறந்து
ஆடல் கலையை கற்பிக்க வாராய் ஐக்கியம் ஆனேன் சிதம்பர நடராசா
ஐயம் இன்றி செய்ய அருள்வாய்
வாக்கியை உடன் ஆடிய நடராசா
வரம் பெற்றோம் கண்டு மகிழ.

Share.

Leave A Reply