நவராத்திரி கொலு மூன்றாம் நாள் துர்க்கை வழிபாட்டுப்பாடல்
சிம்மவாகினி
பல்லவி
சிம்ம வாகினி
சிவலோக தேவி நீ (சிம்ம)
அனுபல்லவி
வினைகள் போக்கும் தேவி நீ
விக்னேஷ்வரன் அன்னை நீ (சிம்ம)
சரணம்
மங்கலம் அருளும் மங்கல சத்தி நீ
சடை முடி தரித்தவன் உமையவள் பத்தினி
(சிம்ம)
சரணம்
துக்க நிவாரணி துலங்கும் சக்தி நீ
துன்பம் போக்கும்
சகல சக்தி நீ (சிம்ம)
சரணம்
நிம்மதி தருபவள்
நித்ய சாந்தி நீ
நெஞ்சில் நிறைந்தவள் நித்ய கல்யாணி நீ
(சிம்ம)
ஜெயதுர்கா பரமேஸ்வரி ஜெயவர்த்தினி ஜெயதுர்க்கையே (சிம்ம)
