பல்லவி

சத்தியலோக
சரஸ்வதியே
சர்வசக்தி நீயம்மா பிரம்மசக்தி நீயம்மா (சத்)

        அனுப்பல்லவி

நித்திய தரிசனம் தாருமம்மா
நினைவில் நல்லதைச் சொல்லம்மா (சத்)

               சரணம்

புத்தியில் வரும் தேவியே புரிய வைப்பவள் நீயம்மா சித்தியை தரும் தேவியே சிந்திக்க வைப்பவள் நீயம்மா!                        (சத்)

               சரணம்

வித்தகி கலை வாணியே விரல் அசைவில் கீதமே சுத்தி சுத்தி வந்தால்
சுகம் தரும் தேவி நீ   (சத்)      
              
                சரணம்

கத்தி இல்லா தேவிநீ கரங்களில் வீணை தாரணி
சுத்தி செய்யும் சுகந்தமே இன்பம் தரும் தேவிநீ (சத்)

Share.

Leave A Reply